டிவிஎஸ் ரைடர் 125 பைக் வாங்கலாமா..?

0

TVS Raider bike

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற கம்யூட்டர் 125சிசி பிரிவில் வந்துள்ள டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் ரைடர் 125 பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்புகள் மற்றும் விலை உட்பட போட்டியாளர்களுடன் ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம்.

Google News

சில வருடங்களாக 125சிசி சந்தையிலிருந்து வெளியேறிருந்த டிவிஎஸ் நிறுவனம், மீண்டும் மிக ஸ்டைலிஷான மற்றும் இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரைடர் மாடல் இந்திய சந்தையில் 150cc அல்லது 160cc பைக்கில் உள்ள வடிவமைப்புக்கு ஈடாக அமைந்துள்ளதாக பரவலாக அனைவராலும் குறிப்பிடப்படுகின்றது.

ரைடர் 125 டிசைன்

மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்பில் பகல் நேர ரன்னிங் விளக்குகளை கொண்டுள்ள ரைடரில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் மிகவும் ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் டூயல் டோன் நிறங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

tvs raider bike launched

சிறப்பம்சங்கள்

ரைடர் 125 பைக்கில் நெகெட்டிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலைப் பெறுகிற இந்த மாடலில் மூன்று டிரிப் மீட்டர், எவ்வளவு தூரம் பயணிக்கும், ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் சராசரி வேக ரெக்கார்டர் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறுகிறது. கூடுதலாக இந்த மாடலில் பாதுகாப்பு அம்சமாக சைடு ஸ்டாண்ட் கட்-ஆஃப் சுவிட்சையும் பெறுகிறது.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் எக்ஸனெக்ட் ப்ளூடூத் செயல்பாட்டை கொண்டுள்ள ரைடர் 125 மாடலில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்புகள், நேவிகேஷன், டிஜி லாக்கர் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. ஸ்பீளிட் இருக்கை சேர்க்கப்பட்டு அதன் அடிப்பகுதியில் ஸ்டோரேஜ் வசதியும் இணைந்துள்ளது.

TVS Raider 125 storage

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் மூலம் கையாளப்படுகிறது. அடுத்தப்படியாக, பிரேக்கிங் அமைப்பில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம்  மற்றும் பின்புறத்தில் பொதுவாக 130 மிமீ டிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு வீல் பேஸ் 1,326 மிமீ மற்றும் இருக்கை உயரம் 780 மிமீ கொண்டு 123 கிலோ எடையைக் கொண்டுள்ளது.

டிவிஎஸ் ரைடர் 125 என்ஜின்

124.8 சிசி, மூன்று வால்வு, காற்றினால் குளிரூட்டப்படுகின்ற இயந்திரம் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 11.4 பிஎச்.பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 11.2 என்.எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்சின் FI ஆப்ஷனை பெற்று ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 மைலேஜ் லிட்டருக்கு 67 கிமீ என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

TVS Raider engine

ரைடிங் மற்றும் பெர்ஃபாமென்ஸ்

மிக சிறப்பான ரைடிங் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் சிறப்பான பவர் வெளிப்படுத்துகின்ற என்ஜின் நல்லதொரு செயல்திறனை வெளிப்படுத்துகின்றது.

அடுத்தப்படியாக, 125சிசி சந்தையில் முதன்முறையாக ரைடர் 125 பைக்கில் இரண்டு ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஈக்கோ மற்றும் பவர் என இரு மோடுகளில் பவரில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ஈக்கோ மோட் ஆர்பிஎம் கட்டுப்பாட்டை முதல் நான்கு கியர்களில் 8,000 ஆர்பிஎம் மற்றும் ஐந்தாவது கியரில் 7,000 ஆர்பிஎம்மில் கொண்டு வருகிறது, இது அதிகபட்ச வேகத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் மூன்று சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்றது.

பவர் மோடில் மிக சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் உருவாக்கியுள்ளது. டிவிஎஸ் ரைடர் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ வரை எட்டுகின்றது.

TVS Raider modes

போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் 125சிசி பிரிவில் அன்றாட பயணங்களுக்கு ஏற்ற வகையில் கிடைக்கின்ற பட்ஜெட் விலை மாடல்களான ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர் 125, ஹீரோ கிளாமர், ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக், ஹோண்டா எஸ்பி125, மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ் 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற ரைடர் 125 பைக் மிக சிறப்பான விலையில் ஸ்டைலிஷான அம்சங்களை கொண்டுள்ளது.

Raider 125 விலை

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரைடர் 125 பைக்கின் டிரம் பிரேக் வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.83,386 மற்றும் டிஸ்க் பிரேக் விலை ரூ.90,157 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்.

ஸ்டைலிஷான தோற்றம்,சிறப்பான வசதிகள், போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் செயல்திறனை பெற்றிருப்பதனால் நிச்சயமாக 125சிசி சந்தையில் டிவிஎஸ் நிறுவனத்துக்கு புதியதொரு தொடக்கத்தை ரைடர் ஏற்படுத்த உள்ளது.

TVS Raider side view

 

Specifications of TVS Raider 125

WHEELS AND TYRES  
Front wheel (inch) 17
Front Tyre 80/100
Rear wheel (inch) 17
Rear Tyre 100/90

 

DIMENSIONS & CHASSIS  
Weight (kg) 123kg
Wheel base (mm) 1326mm
Seat height(mm) 780mm
Fuel Tank capacity (lts) 10 litres

 

ENGINE பெட்ரோல்
No of Cylinders 1
Cubic Capacity (cc) 124.8cc
Cooling System Air-cooled
Fuel Delivery System Fuel-injection
Valves per cylinder 3
Max Power (hp @ rpm) 11.4hp at 7,500rpm
Max Torque (nm @ rpm) 11.2Nm at 6,000rpm

 

SUSPENSION  
Front Suspension Telescopic fork
Rear Suspension Monoshock

 

BRAKES  
Front Brake Type Drum/Disc
Rear Brake Type Drum