டிவிஎஸ் XL மொபட் குறித்து மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

TVS XL 100 itouch side

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய டூ – வீலர் தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் மாடலை தொடர்ந்து பிஎஸ் 6 என்ஜின் வகையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக இந்நிறுவனத்தின் இயக்குநர் கே.என் ராதாகிருஷண்ன் தெரிவித்துள்ளார்.

டிவிஎஸ் இயக்குநர் ராதாகிருஷ்ண்ன் ஆட்டோகார் ப்ரோ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்ட என்ஜின் கொண்ட டிவிஎஸ் எக்ஸ்எல், டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணியில் அடுத்த மோட்டார் சைக்கிள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றையும் டிவிஎஸ் வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்

1.5 லிட்டருக்கு குறைவான டீசல் என்ஜின்கள் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாறும்போது மிகப்பெரிய அளிவில் விலை உயர்வினால் பாதிப்படையும்,  மேலும் குறிப்பாக மொபட் ரக மாடல்களின் விலை ஸ்கூட்டருக்கு இணையாக உயரக்கூடும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

விலை உயர்வினை என்பதனை தவிர பல்வேறு பயன்களை வழங்குகின்ற எக்ஸ்எல் மொபட் தொடர்ந்து இநிறுவனத்தின் முக்கிய மாடலாக விளங்கி வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் கடந்த நிதி ஆண்டின் விற்பனையில் 8.80 லட்சம் மொபட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிஎஸ் 6 நடைமுறைக்கு ஏற்ற தொழிற்நுட்ப மாற்றங்களை மேற்கொள்ளும் போது டிவிஎஸ் எக்ஸ்எல் விலை ஸ்கூட்டருக்கு இணையாக உயரவுள்ளது.

பிஎம்டபிள்யூ-டிவிஎஸ் கூட்டணி

இரு நிறுவனங்களும் மிகவும் சவாலான விலையில் முதல் பைக் மாடலை டிவிஎஸ் அப்பாச்சி RR310, பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மாடல்களை தொடர்ந்து அடுத்த பைக் மாடலை விற்பனைக்கு வெளியட திட்டமிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ டீலர் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தவும், அரசிடம் ஜிஎஸ்டி வரியை பைக்குகளுக்கு 28 சதவீதமாக உள்ளதை 12 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுத்துள்ளது.