எலக்ட்ரிக் ஸ்டார்ட்ருடன் டிவிஎஸ் XL 100 விற்பனைக்கு வெளியானது

0

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற மொபட் ரக மாடலாக விளங்கும் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஹெவி டூட்டி மாடலின் அடிப்படையில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் அம்சத்தை பெற்ற டிவிஎஸ் XL 100 ஐ டச் ஸ்டார்ட் ( i-Touch Start) விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் பிரபலமாக விளங்குகின்ற மொபட் மாடலான டி.வி.எஸ் எக்ஸ்எல் 100, ஊரக சந்தை, பொருட்களை எடுத்துச் செல்ல என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற மாடலை அடிப்படையில் கூடுதலாக எலக்ட்ரிக் ஸ்டார்ட் அம்சத்தை i-Touch Start என்ற பெயரில் வழங்கிருப்பதுடன் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் ஏற்றும் வகையில் யூஎஸ்பி சார்ஜர் சாக்கெட் வழங்கியுள்ளது. கூடுதலாக பர்பிள் நிறத்தை மட்டும் இந்த வேரியன்ட் பெற்றுள்ளது.

இரட்டை பிரிவு இருக்கைகளை கொண்ட இந்த மாடலில் 99 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பெற்ற எக்ஸ்எல் 100 மாடல் அதிகபட்சமாக 4.3bhp பவர் மற்றும் 6.5Nm டார்க் வழங்குகின்றது. ஒற்றை வேக கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

முதற்கட்டமாக டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகான்ட் எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற எக்ஸ்எல் 100 HD மாடல் சாதரன வேரியன்டை விட ரூ. 2450 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் XL 100 i-Touch Start விலை ரூ. 36,109 ஆகும்.