ஹீரோவின் அடுத்த பைக் HX200R அல்லது கரீஷ்மா 200 விற்பனைக்கு வரலாம்

0

Hero HX250

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹீரோ கரீஷ்மா 200 அல்லது HX200R பைக் முதன்முறையாக காட்சிக்கு கிடைத்துள்ளது. பிரீமியம் ரக சந்தையில் பெரிதாக கவனத்தை செலுத்தாத நிலையில் வெளியான எக்ஸ்ட்ரீம் 200R பைக்கினை தொடர்ந்து எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T மாடல்கள் இன்னும் சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரக்கூடும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ காட்சிப்படுத்திய HX250R மற்றும் ஹைஸ்டர் போன்ற மாடல்கள் இதுவரை உற்பத்தி நிலையை எட்டவில்லை. இந்நிலையில் ஹீரோவின் முழுமையான ஃபேரிங் செய்யபட்ட மாடலின் ஸ்பை வீடியோ வெளியாகியுள்ளது.

ஹீரோ கரீஷ்மா 200 அல்லது HX200R பைக்

தற்போது காட்சிக்கு கிடைத்துள்ள ஹீரோவின் முழுதும் அலங்கரீக்கப்பட்ட பைக் மாடல் ஆனது முன்பு, இந்நிறுவனம் காட்சிப்படுத்திய ஹெக்எஸ்250 ஆர் பைக்கின் தோற்ற உந்துதலை பின்புலமாக கொண்டதாக காட்சியளிக்கின்றது.

ஹீரோ கரீஷ்மா 200

மற்றபடி இந்த பைக்கின் விபரம் வெளியாகவில்லை. முழு உற்பத்தி நிலை மாடலாக காணப்படுகின்ற இந்த பைக்கில் ஹீரோ சமீபத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட 200சிஇ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் அடிப்படையிலான ஃபேரிங் மாடலாக இருக்கும் என கருதப்படுகின்றது. எனவே, இந்த பைக்கில் 18.4 ஹெச்பி பவரை வெறிப்படுத்தும் 199.6 சிசி என்ஜின் பெற்று 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.

ஒற்றை எல்இடி ஹெட்லைட், டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூர்மென்ட் கிளஸ்ட்டர் ஆனது எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் உள்ளதை போன்றே அமைந்துள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான கரீஷ்மா ZMR பைக் மாடல் சந்தையில் தனது மதிப்பை இழந்து விட்ட நிலையில் , புதிய மாடல் ஒன்றை ஹீரோ ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக வெளியிட வேண்டியது அவசியமாகிறது.

இந்த மாதத்தின் இறுதி வாரங்களில் ஹீரோ நிறுவனம் அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இது தவிர புதிய பிளெஷர் ஸ்கூட்டர் மற்றும் 125 சிசி ஸ்கூட்டர் ஒன்றையும் வெளியிட உள்ளது.