ராயல் என்ஃபீல்டின் அடுத்த இரு மோட்டார்சைக்கிள்.., ஹண்டர், செர்ப்பா

0

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு குறைந்த விலை கொண்ட மாடலை இலகு எடையுடன் பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் மற்றும் செர்ப்பா என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிடலாம் என எதிர்பார்பக்கப்படுகின்றது. இந்த ஹண்டர் பைக் மாடலில் இடம்பெற உள்ள என்ஜின் குறித்தான தகவல் கிடைக்கப் பெறவில்லை.

Google News

சமீபத்தில் பெயருக்கான வர்த்தக முத்திரை பதிவின் விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதன் பெயர் ஹண்டர் (Royal Enfield Hunter) என தெரிய வந்துள்ளது. ஹண்டர் என்ற பெயரில் வரக்கூடிய ஸ்கிராம்பளர் மாடலாக இடம்பெறக்கூடும், அடுத்த மாடல் ஸ்டீரிட் பைக்கின் பெயராக செர்ப்பா (Royal Enfield Sherpa) என தகவல் தெரிகின்றது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிதாக இலகு எடை மற்றும் குறைவான உயரம் கொண்டவர்களும் ஓட்டும் வகையில் குறைந்த இருக்கை உயரம் பெற்ற தனது மாடலை J1C என்ற குறீயிட்டு பெயரில் தயாரித்து வருகின்றது. மேலும் இந்த மாடல் 346 சிசி என்ஜினை பெறுவதற்கே வாய்ப்புகள் உள்ளது.

தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ஆரம்ப விலை ரூ.1.12 லட்சம் கிடைக்கின்ற நிலையில், இது பிஎஸ்6 நடைமுறைக்கு மாற்றும்போது அனேகமாக ரூ.10,000-ரூ.15,000 விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், புதிதாக தயாரிக்க உள்ள மாடல் புல்லட்டை விட விலை குறைவாக அமைய வாய்ப்புகள் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு செர்ப்பா என்ற மாடலை 1960 ஆம் ஆண்டே 173 சிசி என்ஜின் பெற்ற இரண்டு ஸ்ட்ரோக் மாடலாக விற்பனை செய்து வந்தது. நான்கு ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் அதிகபட்ச வேகத்தை 95 கிமீ வெளிப்படுத்தும்.

பிஎஸ்6 மாடல்களை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டின் மத்தியில் புதிய ராயல் என்ஃபீல்டு ஹண்டர் என்ற பெயரில் இந்த குறைந்த விலை மற்றும் எடை கொண்ட மாடல் வெளியாகலாம். அதேபோல தற்போது சோதனையில் உள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு போன்ற புதிய தலைமுறை மாடல்களும் வரவுள்ளது.

Source – indianautosblog.com