யமஹா R15 V3 மோட்டோ ஜிபி எடிஷன் வருகை விபரம்

இந்தியாவில் முதன்முறையாக யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், மோட்டோ ஜிபி எடிஷன் மாடலை பிரசத்தி பெற்ற யமஹா R15 V3 பைக்கின் வாயிலாக விற்பனைக்கு ஆகஸ்ட் மாத மத்தியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

யமஹா R15 V3 மோட்டோ ஜிபி

ரூ.1.26 லட்சத்தில் விற்பனையில் உள்ள மூன்றாவது தலைமுறை யமஹா R15 V3.0  அடிப்படையில் ஸ்டைலிஷான அம்சங்களை பெற்றதாக  மோட்டோ ஜிபி பந்தயங்களில் பங்கேற்கின்ற மாடலின் உந்துதலில் வடிவமைக்கப்பட்ட மாடல் சாதாரன மாடலை விட கூடுதலான விலையில் அமைந்திருக்கும்.

நீல நிறத்தை பெற்ற ஃபேக்ட்ரி மோட்டோ ஜிபி எடிஷன் மாடலில் மூவிஸ்டார் லோகோ மற்றும்  ENEOS லோகோ ஆகியவற்றை பெற்றிருந்தாலும், மோட்டோ ஜிபி பந்தயங்களில் யமஹா சார்பில் பங்கேற்கும் வாலண்டினோ ரோஸ்ஸி அல்லது மேவரிக் வினலஸ் ஆகியோரின் ரேசிங் நம்பர்கள் இடம்பெறவில்லை. மெக்கானிக்கல் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்திருக்கும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆர்15 வெர்சன் 3.0 மோட்டோஜிபி எடிஷன் மாடலில் முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் இடம்பெற்றிருந்தாலும், இந்தியாவில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மட்டும் இடம்பெற்றிருக்கும்.

19.1 ஹெச்பி வரையிலான பவர், 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் போன்றவற்றை பெற்றுள்ளது.

மிக நேர்த்தியான டெல்டாபாக்ஸ் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஆர்15 பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், டயரில்  282 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் டயரில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படவில்லை.

137 கிலோ எடை கொண்டுள்ள ஆர்15 வி3.0 பைக்கில் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் பொருத்தப்பட்டுள்ள நிலையில் முந்தைய மாடலை விட மிக சிறப்பான முறையில் கையாளும் வகையிலான அம்சத்தை பெற்றதாக ஆர்15 பைக் விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைக் கிரே மற்றும் நீலம் என இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.