ஃபியட் புன்ட்டோ கார்பன் மற்றும் லீனியா ராயல் எடிசன் அறிமுகம்

0

பண்டிகை காலத்தை ஒட்டி ஃபியட் நிறுவனத்தின் புன்ட்டோ கார்பன் மற்றும் லீனியா ராயல் என இரு சிறப்பு பதிப்புகள் கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் சில மாற்றங்களை பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

fiat punto linea special edition

Google News

 

புன்ட்டோ கார்பன் பதிப்பு புன்ட்டோ எவோ 90 ஹெச்பி மாடலை அடிப்படையாக கொண்டதாகவும் ஃபியட் லீனியா ராயல் மாடல் 125 S வேரியன்டை அடிப்படையாக கொண்டதாக வந்துள்ளது.

புன்ட்டோ கார்பன்

புன்ட்டோ கார்பன் மாடல் வெள்ளை நிற வண்ணத்தில் கருப்பு நிற மேற்கூறை நிறத்தை பெற்றதாக கன்மெட்டல் பூச்சூ கொண்ட அலாய் வீல் மற்றும் கார்பன் பேட்ஜ் மற்றும் பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ளது.

உட்புறத்தில் கருப்பு வண்ண இன்டிரியர் , லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி பெற்றுள்ளது.  இதில் 90 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது.

 

 

லீனியா ராயல்

லீனியா ராயல் மாடல் வெள்ளை நிற வண்ணத்தில் கருப்பு நிற மேற்கூறை நிறத்தை பெற்றதாக கன்மெட்டல் பூச்சூ கொண்ட அலாய் வீல் மற்றும் ராயல் பேட்ஜ் மற்றும் பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ளது.

இன்டிரியரில் டேன் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் டேஸ்போர்டின் நிறத்தினை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 125 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லி டி-ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

 

ஃபியட் நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இரு மாடல்களும் கூடுதல் துனைகருவிகளுக்கு ரூ.35,000 வரை கூடுதலாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.