ஜீப் ரேங்கலர் பெட்ரோல் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூபாய் 56 லட்சம் விலையில் ஜீப் ரேங்கலர் பெட்ரோல் எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 கதவுகளை கொண்ட ரேங்கலர் அன்லிமிடேட் மாடலின் அதிகபட்ச பவர் 285 ஹெச்பி ஆகும்.

 

 ஜீப் ரேங்கலர் பெட்ரோல்

ஆல் வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் சிஸ்டத்துடன் 3.8 லிட்டர் வி6 பென்டாஸ்டார் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் அதிகபட்சமாக 285 ஹெச்பி பவர் , 247 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 5 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும்.

பல்வேறு ஆஃப் ரோடு அம்சங்களை பெற்றுள்ள ரேங்கலர் மாடலில்  கமெண்ட் டிராக் 4 வீல் டிரைவ் அமைப்பு ,  எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESC), ஹெவி டூட்டி சஸ்பென்ஷன் சாக்அப்சார்பர் , ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (Hill Start Assist -HSA) உடன் எலக்ட்ரானிக் ரோல் மைகிரேஷன் மற்றும் ரிமோட் கிலெஸ் என்ட்ரி போன்றவற்றை பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்திய சந்தையில் டீசல் ஜீப் ரேங்கலர் , ஜீப் கிராண்ட் செரோக்கீ , ஜீப் கிராண்ட் எஸ்ஆர்டி போன்ற மாடல்களும் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்தாண்டின் மத்தியில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரும்  விற்பனைக்கு வரவுள்ளது.

ஜீப் ரேங்கலர் பெட்ரோல் எஸ்யூவி ரூபாய் 56 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Recommended For You