பிஎம்டபிள்யூ X1 M ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு வந்தது

0
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி காரில் தோற்ற மாற்றத்தை பெற்ற X1 M என்ற பெயரில் ஸ்போர்ட்டிவ் மாடலாக ரூ.37.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
பிஎம்டபிள்யூ X1 M
பிஎம்டபிள்யூ X1 M ஸ்போர்ட்ஸ்

புதிய தலைமுறை எக்ஸ் 1 கார் சமீபத்தில் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 வரும் 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.

எக்ஸ்1 காரில் வேறுபடுத்தி கான்பிக்கும் வகையில் முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் 18 ” அலாய் வீல் , எம் ஸ்போர்ட் ஸ்டீயரிங் வில் மற்றும் லெதர் சுற்றப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் காரில் X1drive20d M ஸ்போர்ட் வேரியண்டில் மட்டுமே வந்துள்ள எஸ்யூவி காரில் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 181பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 350என்எம் மற்றும் 8 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எம் காரில் அல்பின் வெள்ளை மற்றும் லீமென்ஸ் நீலம் என இரண்டு வண்ணணங்களில் மட்டுமே கிடைக்கும். பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் விலை ரூ.37.90 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி).

BMW X1 M Sport launched in India at Rs.37.90 lakhs