புதிய ஆடி Q3 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட ஆடி Q3 எஸ்யூவி கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய க்யூ3 எஸ்யூவி காரின் தோற்றம் மற்றும் உட்புறம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஆடி Q3 எஸ்யூவி
ஆடி Q3 காரின் முகப்பு பம்பர் , கிரில் , முகப்பு விளக்குகள் பின்புறமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டிரியர் மற்றும் குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆடி Q3 வடிவம்
முன் மற்றும் பின்புற பம்பர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கிரில் மற்றும் எல்இடி முகப்பு விளக்கு மற்றும் பகல் நேர விளக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் 17 இஞ்ச் ஆலாய் வீல் மற்றும் க்யூ3 எஸ் வேரியண்டுக்கு மட்டும் 16 இஞ்ச் ஆலாய் வீல் பயன்படுத்தியுள்ளனர். 
ஆடி க்யூ3 உட்புறம்
உட்புறத்தில் முந்தைய டேஸ்பேர்டு இரட்டை டோன் வண்ண்களால் மேம்படுத்தியுள்ளனர். பல இடங்களில் குரோம் இன்ஸ்ர்ட் தந்துள்ளனர்.
ஆடி க்யூ3 உட்புறம்
ஆடி Q3 என்ஜின்
2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 174பிஎச்பி ஆகும். முறுக்கு விசை 380என்எம் ஆகும். 7 வேக எஸ்-ட்ரானிக் தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். ஆடி குவாட்ரோ ஆல்வீல் டிரைவ் அமைப்பினை பெற்றுள்ளது.
Q3 S வேரியண்டில்  138பிஎச்பி ஆற்றலை மட்டுமே தரும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். முன்பக்க டிரைவ் மட்டுமே கொண்டதாகும்.

ஆடி Q3 0-100கிமீ வேகத்தினை எட்ட 8.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 212கிமீ ஆகும். ஆடி க்யூ3 மைலேஜ் லிட்டருக்கு 15.73கிமீ ஆகும்.

ஆடி க்யூ3 போட்டியாளர்கள் மெர்சிடிஸ் GLA மற்றும் பிஎம்டபிள்யூ X1 ஆகும்.

ஆடி Q3 எஸ்யூவி கார் விலை (ex-showroom delhi)

Q3 S – ரூ 28.99 லட்சம்
Q3 Premium – ரூ 33.99 லட்சம்
Q3 Premium Plus – ரூ 37.50 லட்சம்

Audi Q3 facelift launched in India