புதிய டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட புதிய டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி  விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சஃபாரி ஸ்ட்ராம் காரில் மேம்படுத்தப்பட்ட என்ஜின் , கூடுதல் வசதிகள் , தோற்ற மாற்றங்கள் மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்களை கண்டுள்ளது.

சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி காரில் 2.2 லிட்டர் Varicor டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 148பிஎச்பி ஆகும். முந்தைய மாடலை விட ஆற்றல் 10பிஎச்பி கூடுதலாகும். இதன் முறுக்கு விசை 320என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

முகப்பில் புதிய லேண்ட் ரோவர் குரோம் பூச்சு கொண்ட தேன்கூடு கிரில் போன்ற அமைப்பினை பெற்றுள்ளது.  உட்புறத்தில் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , பூளூடுத் , ஆக்ஸ் உன் , யூஎஸ்பி , கருப்பு இன்டிரியர் உடன் கூடிய சில்வர் அசென்ட்ஸ், புதிய ஸ்டீயரிங் வீல் ஆடியோ கட்டுப்பாடு பொத்தானுடன் , பின்புற கேமரா , ஃபிளப் கீ போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

EX மற்றும் VX மாடல்களில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் LX மாடலில் பின்புறத்தில் டிஸ்க் பிரேக்கிற்க்கு பதிலாக டிரம் பிரேக் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது ஜம்ப் இருக்கை வரிசையை இழந்துள்ளது.

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி விலை விபரம் (ex-showroom chennai)

சஃபாரி ஸ்ட்ராம் LX –ரூ.9.98 லட்சம்

சஃபாரி ஸ்ட்ராம் EX — ரூ.11.64 லட்சம்

சஃபாரி ஸ்ட்ராம் VX — ரூ.13.20 லட்சம்

சஃபாரி ஸ்ட்ராம் VX  (4X4) — ரூ.14.55 லட்சம்

2015 Tata Safari Storm Facelift Launched price from at Rs.9.98 lakhs.

Share
Published by
automobiletamilan

Recent Posts

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…

2021/02/26

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…

2021/02/26

இந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்

அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…

2021/02/25

6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது

5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…

2021/02/24

ரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…

2021/02/24

சோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.?

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…

2021/02/24