புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு வந்தது

0
மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவி ரூ. 15.99 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500

இந்தியாவின் இளம் வாடிக்கையாளர்களின் மனதில் மிக இலகுவாக தன் நேரத்தியான ஸ்டைலீஸ் தோற்றத்தால் இடம்பிடித்த மஹிந்திரா XUV500 எஸ்யூவி ரக காரின் மேம்படுத்தப்பட்ட மாடலின் மாற்றங்கள் என்ன ?

Google News
எக்ஸ்யூவி500

வடிவமைப்பு

முகப்பில் உள்ள தேன்கூடு கிரிலுடன் கூடிய மஹிந்திராவின் பாரம்பரியமான கோடுகளில் குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. புதிய புராஜெக்டர் முகப்பு விளக்குகளில் S  வடிவ பகல் நேர எல்இடி விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் L வடிவ புதிய பனி விளக்குகளை சுற்றி குரோம் பட்டை இணைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா XUV5OO

புதிய 17 இஞ்ச் ஆலாய் வீல் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் குரோம் பூச்சு கொண்ட பதிவென் மேல் பூசப்பட்டுள்ளது. கதவு கைப்பிடிகள் மாற்றப்பட்டுள்ளன.

புதிதாக இரண்டு வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை ஆரஞ்சு மற்றும் வெள்ளை. முந்தைய வண்ணங்களுடன் சேர்த்து மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கும்.

உட்புறம்

மஹிந்திரா XUV5OO  காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் பீய்ஜ் வண்ணத்தில் ஃபினிஷ் செயப்பட்டுள்ளது. மேலும் புதிய அலுமினிய பெடல்கள் , சன்ரூஃப் , புதிய ஆலாய் வீல் , ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான் , கீலெஸ் என்ட்ரி ,   நேவிகேஷன் அமைப்பு , போன்றவை சேர்க்கப்பட்டடுள்ளன.

 வாய்ஸ் செய்தி அமைப்பின் மூலம் கதவு திறந்திருந்தால் , இருக்கை பட்டை அணிய,  ஹேன்ட் பிரேக் என்கேஜ் போன்றவற்றை அறிவிக்கும்.

6 விதமாக இருக்கையின் உயரத்தினை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி ,பூளூ சென்ஸ் ஆப் போன்ற அமசங்கள் இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 சன்ரூஃப்

மஹிந்திரா எக்ஸ்யூவி500

என்ஜின்

140பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் முந்தைய என்ஜினே பயன்படுத்தியுள்ளனர். என்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 16கிமீ என தெரிவித்துள்ளது. 6 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , பிரேக் ரீஜெனரஷன் அமைப்பு , வண்டி உருளுவதனை தடுக்கும் புதிய இஎஸ்பி அமைப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

புதிய வேரியண்ட் W10யில் பல புதிய வசதிகள் கொண்ட பிரிமியம் மாடலாக விளங்குகின்றது. இந்த மாடலில் ORVM மூலம் XUV 500 என காட்டும் புராஜெக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

NewAge XUV500‬

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலை

எக்ஸ்யூவி500 W4– ரூ.11.21 லட்சம்

எக்ஸ்யூவி500 W6— ரூ.12.48 லட்சம்

எக்ஸ்யூவி500 W8—- 14.18 லட்சம்

எக்ஸ்யூவி500 W8 — 14.99 லட்சம் (ஆல் வீல் டிரைவ்)

எக்ஸ்யூவி500 W10–14.99 லட்சம்

எக்ஸ்யூவி500 W10—15.99 லட்சம்  (ஆல் வீல் டிரைவ்)

(ex-showroom Delhi)

Mahindra XUV500 facelift launched in India. New XUV5OO gets lot of features like Sunroof , ESP9 , voice messaging system etc…