புதிய ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே விற்பனைக்கு அறிமுகம்

0

மேம்படுத்தப்பட்ட புதிய ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே மாடல் ரூ.9.34 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாட்ஜி ஸ்டெப்வே மாடலில் புதிதாக 16 வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

renault-lodgy-stepway

லாட்ஜி எம்பிவி கார் மாடலின் பிரிமியம் மாடலாக விளங்கும் ஸ்டெப்வே மாடலில் புதிதாக 16 மாற்றங்கள் தோற்றம் மற்றும் இன்டிரியர் அமைப்பில் பெற்றுள்ளது.  7 அல்லது 8 இருக்கை தேர்வுகளில் கிடைக்கின்ற ஸ்டெப்வே மாடலின் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 83 பிஹெச்பி மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 108 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

புதிய லாட்ஜி ஸ்டெப்வே தோற்றம்

முன்பக்கத்தில் அமைந்துள்ள ஜூவல் ஸ்டட் கிரிலின் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.மேலும் அலுமினியம் ஃபினிஷ் ஸ்கிட் பிளேட் , பனி விளக்கு பீசல் , ஸ்டெப்வே ஸ்டிக்கரிங் , கருப்பு வண்ண மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட ரூஃப் ரெயில்கள் , மேம்படுத்தப்பட்ட டெயில் லேம்ப் மற்றும் 16 இஞ்ச் கன்மெட்டல் ஃபினிஷ் அலாய் வீல் பெற்றுள்ளது.

renault-lodgy-stepway-interior

 

ஸ்டெப்வே இன்டிரியர்

இன்டிரியரில் பீஜ் மற்றும் பிரவுன் நிறத்திலான டைமன்டு வண்ண நூல் கொண்டு தைக்கப்பட்ட அப்ஹோல்ஸ்ட்ரி  , இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை பெற்றுள்ளது.

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே காரின் போட்டியாளர்கள் இன்னோவா க்ரீஸ்ட்டா, எர்டிகா , சைலோ போன்றவை ஆகும்.  ரெனோ நிறுவனம் வருட நிறைவை ஒட்டி தங்களுடைய அனைத்து மாடல்களுக்கும் ரூ.1 லட்சம் வரை சலுகைகள் வழங்குகின்றது.

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே விலை பட்டியல்

Renault Lodgy Stepway RXL 83bhp 8-Seater – ரூ. 9,43,831

Renault Lodgy Stepway RXL 108bhp 8-Seater – ரூ. 10,09,831

Renault Lodgy Stepway RXZ 83bhp 8-Seater – ரூ. 10,17,831

Renault Lodgy Stepway RXZ 108bhp 8-Seater – ரூ. 10,06,831

Renault Lodgy Stepway RXZ 108bhp 7-Seater – ரூ. 11,26,831

( அனைத்து டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை )

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே படங்கள்