போர்ஷே கேயேன் S பிளாட்டினம் எடிசன் அறிமுகம்

ரூபாய் 1.27 கோடி விலையில் போர்ஷே கேயேன் S பிளாட்டினம் பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷன்களிலும் கேயேன் எஸ் வந்துள்ளது.

porsche cayenne s platinum

போர்ஷே கேயேன் S

விற்பனையில் உள்ள சாதரன கேயேன் மாடலை விட கூடுதலாக பலவேறு வசதிகளை கொண்டுள்ள எஸ் பிளாட்டினம் மாடின் டீசல் வேரியன்டில் 4,134cc ட்வீன் டர்போ 8 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் 380 bhp மற்றும் 850Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல் மாடலில் 3,604cc ட்வீன் டர்போ 8 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் 414 bhp மற்றும் 550Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பை-ஸெனான் ஹெட்லேம்ப் பெற்று விளங்கும் கேயேன் S மாடலில் 21அங்குல அலாய் சக்கரம் வீல் ஆர்ச் ,பாடி கிளாடிங் போன்றவற்றுடன்  கருப்பு, மஹோகனி ,  சில்வர் மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

porsche cayenne s platinum rear

இன்டிரியரில் 7 அங்குல தொடுதிரை பிசிஎம் உன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துன் (Porsche Communication Management -PCM) , போஸ் ஆடியோ சிஸ்டம் , முன் மற்றும் பின் புறங்களில் பார்க்கிங் சென்சார்கள் என பலவற்றை பெற்றுள்ளது.

  • போர்ஷே கேயேன் S பிளாட்டினம் பெட்ரோல் விலை ரூபாய் 1.27 கோடி
  • போர்ஷே கேயேன் S பிளாட்டினம் பெட்ரோல் விலை ரூபாய் 1.31 கோடி

(ex-showroom, Maharashtra)