மூன்று சக்கர ஆட்டோ ஸ்கார்ப்பியோ மாடலுக்கு சுப்ரோ பரிசு : ஆனந்த மஹிந்திரா

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை அடையாளங்களில் தனித்துவமான பெருமையுடன் விளங்குகின்ற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி வடிவத்தை மூன்று சக்கர ஆட்டோவில் கஸ்டமைஸ் செய்திருந்தவருக்கு 4 சக்கர சுப்ரோ மினி டிரக்கை பரிசாக ஆனந்த மஹிந்திரா வழங்கி அசத்தியுள்ளார்.

ஸ்கார்ப்பியோ எஸ்யூவி

  • முன்று சக்கர ஆட்டோ ரிக்ஷாவுக்கு 4 சக்கர மஹிந்திரா சுப்ரோ மினி டிரக் இலவசம்.
  • மஹிந்திரா நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எஸ்யூவிகளின் ராஜா என அங்கீகாரம் பெற்ற ஸ்கார்ப்பியோ எஸ்யூவி காரின் முதல் தலைமுறை மாடலின் பின்புற தோற்ற அமைப்பை போல மிக நேர்த்தியாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுனில் என்பவரின் ஆட்டோவை பெற்றுக் கொண்டு அதற்கு மாற்றாக மஹிந்திரா சுப்ரோ மினி டிரக்ஐ பரிசாக மஹிந்திரா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த மஹிந்திரா வழங்கி உள்ளார்.

மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா தற்பொழுது மஹிந்திரா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. டிவிட்டரில் கஸ்டமைஸ் செய்த படத்தை அனில் பானிக்கர் என்பவர் அனந்த மகேந்திரா அவர்களுக்கு டிவீட் செய்ததை தொடர்ந்து அதனை பார்த்த ஆனந்த அவருக்கு புதிய 4 சக்கர வாகனத்தை இலவசமாக மாற்றி வழங்குவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்தே தற்பொழுது இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதுகுறித்தான டிவிட்டர் தொகுப்பை கீழே காணலாம்.

Recommended For You