ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரசத்தி பெற்ற க்ரெட்டா , டெரானோ, காம்பஸ் மற்றும் XUV500 உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ளது.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிகவும் சவாலான ஆரம்ப விலையில் பல்வேறு வசதிகளை பெற்ற மாடலாக கேப்டூர் எஸ்யூவி நவீன தலைமுறக்கு ஏற்ற க்ராஸ்ஓவர் ரக டிசைன அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.

எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள், 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் ஆகியவற்றுடன் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி உட்பட்ட அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.

எஞ்சின்

டஸ்ட்டர் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும்  1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

நுட்ப விபரம் பெட்ரோல் டீசல்
சிசி 1498 cc 1461 cc
பவர் 106 hp at 5600 rpm 110 hp at 4000 rpm
டார்க் 142 Nm at 4000 rpm 260 Nm at 1750 rpm
கியர்பாக்ஸ் 5-speed MT 6-speed MT

போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா , நிசான் டெரானோ, ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா XUV500 ஆகிய மாடல்களுக்கு எதிராக மிகவும் சவாலான விலையில் கேப்டூர் அமைந்துள்ளது.

ரெனால்ட் கேப்டூர் விலை பட்டியல்

Variants பெட்ரோல் டீசல்
RXE ரூ. 9.99 லட்சம் ரூ.11.39 லட்சம்
RXL ரூ. 11.07 லட்சம் ரூ 12.47 லட்சம்
RXT ரூ. 11.69 லட்சம் ரூ.13.09 லட்சம்
Platine ரூ.13.88 லட்சம்

 

(சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை)

Recommended For You