Site icon Automobile Tamilan

ரெனோ க்விட் ஏஎம்டி டீஸர் வெளியீடு

ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காரில் கூடுதலாக எதிர்பார்க்கப்பட்ட ரெனோ க்விட் ஏஎம்டி காரினை விரைவில் வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில் க்விட் ஏஎம்டி டீஸர் வெளியாகியுள்ளது.

மிக குறுகிய காலத்தில் இந்தியாவின் மிக சிறந்த காராக விற்பனையில் முன்னிலை பெற்று விளங்கும் க்ராஸ்ஓவர் ரக ஸ்டைலை அடிப்படையாக கொண்ட ரெனோ க்விட் இந்தியாவின் முன்னனி மாடலாக சில தசாபத்ங்களாக இருந்து வரும் மாருதி ஆல்ட்டோ காரினை பின்னுக்கு தள்ள தொடங்கியுள்ள நிலையில் கூடுதலாக வரவுள்ள ஏஎம்டி மாடல் க்விட் பலத்தை அதிகரிக்க உள்ளது.

விற்பனையில் உள்ள 0.8 லி மற்றும் 1.0 லி க்விட் காரில் இடம்பெற்றுள்ள 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ள இதன் அடிப்படையிலே 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் வரவுள்ளது. 0.8 லி மற்றும் 1.0 லி  என இரு எஞ்சின் ஆப்ஷன்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரின் தோற்றம் மற்றும் வசதிகள் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்காது.

க்விட் என்ஜின்

க்விட் காரில் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

ஆல்ட்டோ கே10 ஏஜிஎஸ் மாடலுக்கு நேரடியான போட்டியாக வரவுள்ள ரெனோ க்விட் ஏஎம்டி அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

Exit mobile version