ரெனோ லாட்ஜி கார் விற்பனைக்கு வந்தது

0
ரெனோ லாட்ஜி எம்பிவி கார் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனோ லாட்ஜி காரின் தொடக்க விலை ரூ 8.19 இலட்சம் ஆகும்.

ரெனோ லாட்ஜி கார்

மிக அதிகப்படியான இடவசதி கொண்ட ரெனோ லாட்ஜி கார் இரண்டு விதமான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய வகையில் விற்பனைக்கு வந்துள்ளது.

தோற்றம்

முகப்பில் 3 ஸ்லாட்களை கொண்ட குரோம் பூச்சூக்கு மத்தியில் ரெனோ இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.  பக்கவாட்டில் மிக நீளமான தோற்றத்தினை தருகின்றது. பின்புறத்தில் பெரிதாக லாட்ஜி கவரவில்லை.

Google News

உட்ப்புறம்

உட்ப்புறத்தில் பெரும்பாலான பாகங்கள் டஸ்ட்டரில் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் உயர்ரக மாடலில் தொடுதிரை இன்ஃபோன்டெயின்மென்ட் இணைந்த செயற்க்கைகோள் நேவிகேஷன் அமைப்பு, கீலெஸ் என்ட்ரி , கரூஸ் கட்டுப்பாடு , ரியர் வீயூ கேமரா , பார்க்கிங் சென்சார் , மூன்றாவது வரிசைக்கும்  ஏசி வென்ட்டுகள், போன்றவற்றை கொண்டுள்ளது.

7 மற்றும் 8 இருக்கைகள் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

லாட்ஜி உயர்ரக மாடலில் இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி , இம்மொபைல்சர், இம்பெக்ட் சென்சார் டோர் லாக் , போன்ற வசதிகள் உள்ளன.

என்ஜின் 

1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் பொருத்தபட்டுள்ளது. அடிப்படை மாடல்களில் 84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

உயர்ரக மாடல்களில்  108.5பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ரெனோ லாட்ஜி மைலேஜ்

84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 21.04கிமீ ஆகும்.  108.5பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 19.98 கிமீ ஆகும்.

ரெனோ லாட்ஜி கார் விலை

84பிஎச்பி விலை விபரம் (ex-showroom, Delhi)

ரெனோ லாட்ஜி Standard: ரூ 8.19 இலட்சம்

ரெனோ லாட்ஜி  RxE: ரூ 8.99 இலட்சம்

ரெனோ லாட்ஜி RxL: ரூ 9.59 இலட்சம்

ரெனோ லாட்ஜி RxZ: ரூ. 10.89 இலட்சம்

108.5 பிஎச்பி விலை விபரம் (ex-showroom, Delhi)

ரெனோ லாட்ஜி RxL: ரூ 10.09 இலட்சம்

ரெனோ லாட்ஜி RxZ 8-seater: ரூ 11.49 இலட்சம்

ரெனோ லாட்ஜி RxZ 7-seater: ரூ 11.79 இலட்சம்