ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே விற்பனைக்கு வந்தது

ரெனோ லாட்ஜி எம்பிவி காரின் ஸ்டெப்வே மாடல் ரூ.11.99 லட்சத்தில் விலையில்  விற்பனைக்கு வந்துள்ளது. RXz வேரியண்டில் 7 மற்றும் 8 இருக்கைகளில் ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே கிடைக்கின்றது.

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே

ஸ்டெப்வே வேரியண்டில் ஸ்லாட் கிரிலுக்கு பதிலாக ஸ்ட்டூ கிரில் உள்ளது. பாடி கிளாடிங் , ரூஃப் ரெயில் , புதிய ஆலாய் வீல் , ஸ்கிட் பிளேட் போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷனில் கிடைக்கும். முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே

108.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 கே9கே என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே கிடைக்கும்.

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே விலை விபரம்

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே ரூ.11.99 லட்சம் (8 இருக்கை)

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே ரூ.12.29 லட்சம் (7 இருக்கை)

Renault Lodgy Stepway launched in India. Lodgy Stepway available in both seven and eight seater option