லம்போர்கினி ஹூராகேன் ஏவியோ சிறப்பு எடிசன் அறிமுகம்

0

உலகயளவில் 250 அலகுகள் விற்பனை செய்யப்ப உள்ள லம்போர்கினி ஹூராகேன் ஏவியோ சிறப்பு வரையறுக்கப்பட்ட எடிசன் போரிடும் ஜெட் விமானங்களின் தாத்பரியத்தை உந்துதலாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஏவியோ சிறப்பு எடிசன் விலை ரூ.3.71 கோடி ஆகும்.

கடந்த ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூராகேன் ஏவியோ எடிசன் மாடலின் இன்டிரியர் மற்றும் வெளிதோற்றங்களில் பல மாறுதல்களை கொண்டுள்ளது. LP610-4 மாடலில் வெளிவந்துள்ள சிறப்பு பதிப்பின் முகப்பில் பம்பரில் இரட்டை வண்ண நிறம், இரண்டு ரேசிங் ஸ்டிக்கர் பானெட் மற்றும் மேற்கூறையில் , இரு பிளாங்கில் L63 பேட்ஜ் பெற்றுள்ளது.

Google News

L63  என்றால் L- Lamborghini 63 – லம்போர்கினி தொடங்கப்பட்ட ஆண்டு ஆகும். இதில் 610 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 5.2 லிட்டர் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்ல 7 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மட்டுமே முன்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பதிப்பான எவியோ எடிசன் கார்கள் இத்தாலி போர் விமானங்களை உந்துதலாக கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.