விரைவில்., மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஏஎம்டி விற்பனைக்கு அறிமுகம்

0

xuv 300

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எக்ஸ்யூவி 300 எஸ்யூவி ரக மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்டை அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Google News

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் ஒரே தருனத்தில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. மிகவும் பிரபலமான விட்டாரா பிரெஸ்ஸா காரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் எக்ஸ்யூவி300 விற்பனையில் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஏஎம்டி

சமீபத்தில் வெளியான சில தகவலின் அடிப்படையில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி 300 காரிலும் 6 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் பெட்ரோல் 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளிலும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

xuv300

110 hp பவர் மற்றும் 200 NM டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6  வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மஹிந்திரா XUV300 பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ ஆகும். டீசல் எக்ஸ்யூவி தேர்வில் 117 hp பவர் வெளிப்படுத்தும் என்ஜின் அதிகபட்சமாக 300 NM டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மஹிந்திரா XUV300 டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ ஆகும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏ.எம்.டி, ஹூண்டாய் வென்யூ ஆட்டோமேட்டிக், நெக்ஸான் ஏ.எம்.டி மற்றும் ஈக்கோஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் போன்ற மாடல்கள்க்கு சவாலாக விளங்கும். டாப் வேரியன்டின் அடிப்படையில் வெளியிடப்படலாம் என்பதால், ரூ.50,000 விலை அதிகரிக்கப்பட்டு ரூ.12.30 லட்சத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஏஎம்டி விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

mahindra xuv300