ஸ்கோடா ஆக்டாவியா RS கார் விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவின் மிக குறைந்த விலை பெர்ஃபாமென்ஸ் ரக செடான் கார் மாடலாக ஸ்கோடா ஆக்டாவியா RS கார் ரூ. 24.62 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 230hp பவரை வெளிப்படுத்தும் எஞ்சினை ஆக்டாவியா ஆர்எஸ் வெளியிடப்பட்டுள்ளது.

2017 skoda octavia rs

ஸ்கோடா ஆக்டாவியா RS கார்

சாதாரண ஆக்டாவியா காரின் தோற்ற அமைப்பிலிருந்து வித்தியாசப்படுத்தும் வகையில் முகப்பில் vRS பேட்ஜ் உடன் கூடிய கருப்பு நிற கிரிலுடன் கூடியதாக க்ரோம் பூச்சூ கொண்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகளுடன் கூடிய இந்த காரின் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் 19 அங்குல அலாய் வீல் பெற்றதாக கிடைக்கின்றது.

2017 skoda octavia rs interior

இன்டிரியரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் மிரர்லிங்க்,டிரைவர் அசிஸ்ட் ஆகியவற்றுடன் 9 காற்றுப்பைகள், இஎஸ்பி உடன் கிடைக்கின்றது.

முந்தைய 1.8 லிட்டர் எஞ்சினுக்கு மாற்றாக புதிய டர்போ-சார்ஜ்டு 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 230hp பவரை வெளிப்படுத்துவதுடன் 350Nm டார்க்கினை வழங்குகின்றது. முன்புற சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

2017 skoda octavia rs dashboard

ஸ்கோடா ஆக்டாவியா RS விலை பட்டியல்

சாதாரண ஆக்டாவியா செடான் கார் ரூ.15.49 லட்சம் முதல் ரூ. 22.90 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் ஸ்கோடா ஆக்டாவியா RS கார் விலை ரூ.24.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும்.

2017 skoda octavia rs boot 2017 skoda octavia rs rear