டாடா டிகோர் கார் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

0

டாடாவின் டியாகோ காரை அடிப்படையாக கொண்ட டாடா டிகோர் கார் ரூ.4.70 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ள  நிலையில் செடான் ரக டீகோர் காரினை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

tata tigor

Google News

டாடா டிகோர்

 • ரூ. 4.70 லட்சம் விலையில் டீகோர் கார் விற்பனைக்கு வரவுள்ளது.
 • டியாகோ காரினை அடிப்படையாக கொண்ட டிகொர் செடான் ரக மாடலாகும்.
 • டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் மொழியில் வழங்கப்படுகின்ற மாடலில் இரண்டாவது மாடலாகும்.
 • கைட்5 என அழைக்கப்பட்ட மாடலின் புதிய பெயரே டிகோர் ஆகும்.

1. இம்பேக்ட் டிசைன் 

டாடா மோட்டார்சின் புதிய வடிவ மொழியான இம்பேக்ட் டிசைன் தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டியாகோ காரின் தோற்ற அம்சங்களையே கொண்டே கூடுதலாக பூட்ஸ்பேஸ் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும் செடான் ரக டிகோர் மாடலில் அமைந்துள்ள பின்புற பூட்வசதியானது கூபே ரக மாடல்களுக்கு இணையான கவர்ச்சியை பெற்றுள்ளதால் இதனை டாடா ஸ்டைல்பேக் (Styleback) என அழைக்கின்றது.

tata tigor side view

2. இன்டிரியர்

டியாகோ காரின் இன்டிரியர் அமைப்பினையை போன்ற பெற்ற உட்புற வடிவமைப்பினை பெற்றதாக விளங்க உள்ள டிகோர் காரில் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதுடன் இதில் சில வசதிகளில் முக்கியமானவை…

 • ஜூக் கார் ஆப்
 • ஸ்மார்ட் போன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆப்
 • பூளூடூத் , யூஎஸ்பி , ஆக்ஸ் போன்ற ஆதரவுகள்
 • ரியர் பார்க்கிங் சென்சார்
 • கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர்
 • குறைவான எரிபொருள் எச்சரிக்கை
 • எரிபொருள் அளவினை பொருத்து எவ்வளவு தூரம் பயணிக்கலாம்

tata tigor interior 1

3. இன்ஜின்

69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

tata tigor rear

4. ஏஎம்டி

டியாகோ காரில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலை போன்றே டிகொர் காரிலும் ஏஎம்டி ஆப்ஷன் காலதாமதமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

5. வேரியன்ட்

டிகோர் காரில் மொத்தம் 4 விதமான வேரியன்ட்கள் கிடைக்கின்றது. அவை XE, XT, XZ மற்றும் XZ (O)  போன்றவையாகும்.

tata tigor dashboard

6. டிகோர் போட்டியாளர்கள்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் , அமியோ ,  டிசையர் , அமேஸ் மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் போன்ற கார்களுக்கு போட்டியாக விளங்கும் வகையில் டாடா டிகோர் செடான் கார் அமைந்திருக்கும்.

7. விலை

விற்பனையில் உள்ள காம்பேக்ட் ரக செடான் மாடலில் விலையில் வந்துள்ள டாடா டீகோர் கார் ரூ.4.70 லட்சத்தில் தொடங்கியுள்ளது.

tata tigor seats

 

டாடா டிகோர் விலை பட்டியல் (சென்னை)
டாடா டிகோர் பெட்ரோல் டீசல்
XE ரூ.4,64,169 ரூ.5,46,552
XM ரூ. 5,06,778 ரூ.5,89,172
XT ரூ.5,36,060 ரூ.6,18,820
XZ ரூ.5,83,919 ரூ.6,66,807
XZ (O) ரூ.6,12,153 ரூ.6,95,127


tata tigor side