டாடா ஹெக்ஸா கார் முழுவிபரம் – updated

0

டாடா மோட்டார்சின் டாடா ஹெக்ஸா க்ராஸ்ஓவர் எம்பிவி கார் ரூ.11.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.  டாடா ஹெக்ஸா காரில் ஆட்டோ மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் மேலும் 4 விதமான டிரைவிங் மோட்கள் இடம்பெற்றுள்ளது.

tata hexa launch details 1

Google News

ஹெக்ஸா என்ஜின் விபரம்

ஆர்யா எம்பிவி காரினை அடிப்படையாக கொண்ட எஸ்யூவி க்ராஸ்ஓவர் கார் மாடலாக வரவுள்ள ஹெக்ஸா காரில் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும்  156 bhp ஆற்றலை வெளிப்படுத்தும்  2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் எஞ்சின் இடம் பெற்றிருக்கும். இதன் டார்க் 400 Nm ஆகும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். 4 விதமான சூப்பர் டிரைவ் மோட்ஸ் இடம்பெற்றுள்ளது.  மேலும் வேரிகார்320 டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 148 bhp பவரை வெளிப்படுத்தும். இதன் டார்க் 320Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.

tata hexa suv

ஹெக்ஸா டிசைன்

டாடா பயணிகள் பிரிவின் புதிய இம்பேக்ட் கார் வடிவ தாத்பரியங்களின் அடிப்படையில் மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ள ஹெக்ஸா எம்பிவி காரின் விடிவம் மிக கவர்ந்திழுக்கும் எஸ்யூவி க்ராஸ்ஓவர் காராக விளங்குகின்றது.

புராஜெக்டர் ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , பக்கவாட்டில் மிக உயரமான 19 இன்ச் அலாய்வீல் , பாடிகிளாடிங் , ஸ்டைலிசான ரியர் கதவுகள் மற்றும் டெயில் விளக்குகள் என முற்றிலும் ஆரியா காரிலிருந்து மாறுபட்ட  காராக விளங்குகின்றது. காரின் அளவுகள் 4,788 மிமீ நீளமும், 1,895 மிமீ அகலமும் மற்றும் 1,780 மிமீ உயரத்துடன் சிறப்பான இடவசதி தரவல்ல வீல்பேஸ் 2,850 மிமீ ஆகும். இந்த காரில் நீலம் , சில்வர் , கிரே  , வெள்ளை மற்றும் பிளாட்டினம் சிலவர் என மொத்தம் 5 விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

வெளிதோற்றம் மட்டுமல்லாமல் 6 மற்றும் 7 இருக்கை ஆப்ஷனை கொண்ட  உட்புறத்திலும் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , 5.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஆப்ஷன் , நேவிகேஷன் அமைப்பு , 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் , நேர்த்தியான புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவை பெற்றிருக்கும்.

tata hexa premium leather seats

சிறப்பு வசதிகளில் லேண்ட்ரோவர் காரில் உள்ளதை போன்ற நான்கு டெர்ரெயின் மோட்களை கொண்ட டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் , 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இஎஸ்பி, டிராக்ஷ்ன் கன்ட்ரோல் , எஞ்சின் டிராக் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா சென்சார் என பல நவீன வசதிகளை கொண்டதாக விளங்கும்.

டாடா ஹெக்ஸா சூப்பர்டிரைவ் மோட்ஸ்

ஹெக்ஸா காரில் ஆட்டோ , கம்ஃபார்ட் , டைனமிக் மற்றும் ரஃப் ரோடு என 4 விதமான சூப்பர்டிரைவ் மோட்களை பெற்றதாக விளங்கும். 4 விதமான மோட்களிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்கும். மேலும் ஆட்டோமேட்டிக் வேரியன்டில் ரேஸ்கார் மேப்பிங் இடம்பெற்றிருக்கும்.

ஆட்டோ மோட்

தானியங்கி முறையில் சாலையின் தன்மைக்கு ஏற்ப செயல்பட்டு ஹெக்ஸா சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். சாலையின் தன்மை அல்லது ஒட்டுநரின் திறனுக்கு ஏற்ப செயல்படும் விதமாக ஆட்டோ மோட் அமையும்.

tata hexa LED taillamps

கம்ஃபார்ட் மோட்

இன்ஜின் ஆற்றல்  மிக சீராக சக்கரங்களுக்கு கடத்தி சிறப்பான சொகுசு தன்மையை வெளிப்படுத்தும் மேலும் சீரான வேகத்தில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு ஏற்றதாக அமையும்.

டைனமிக் மோட் 

ஹெக்ஸா காரில் இடம்பெற்றுள்ள டைனமிக் மோட் வாயிலாக அதிகப்படியான பவர் மற்றும் வேகத்தினை வெளிப்படுத்தும். இந்த மோடின் வாயிலாக வளைவான சாலைகள் , டிரிஃபடிங் போன்றவற்றில் மிக உதவிகரமாக இருக்கும். மேலும் இஎஸ்பி தேவை ஏற்படும் பொழுது தானாகவே இயங்க தொடங்கி பாதுகாப்பினை உறுதிசெய்யும்.

ரஃப் ரோடு மோட்

மிக சவாலான ஆஃப் ரோடுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த மோட் வாயிலாக சிறப்பான செயல்திறன் மற்றும் பிரேக்கிங் செயல்பாடு போன்றவற்றை வழங்கும். மேலும் டைனமிக் செயல்பாட்டை சிறப்பாக வெளிப்படுத்தும்.

ஆசியா , ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா என 3 கண்டங்களில் 8,00,000 கிலோமீட்டர்களுக்கு மேல் 20 டிகிரி முதல் 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் சோதிக்கப்பட்டுள்ள ஹெக்ஸா காரில் பல்வேறு விதமான நவீன வசதிகளை பெற்றதாக விளங்கும்.

ஹெக்ஸா வேரியண்ட் விபரம்

  1. Tata Hexa XE 4×2 MT
  2. Tata Hexa XM 4×2 MT
  3. Tata Hexa XM 4×4 MT
  4. Tata Hexa XT 4×2 MT
  5. Tata Hexa XT 4×4 MT
  6. Tata Hexa XMA 4×2 AT
  7. Tata Hexa XMA 4×4 AT
  8. Tata Hexa XTA 4×2 AT
  9. Tata Hexa XTA 4×4 AT

tata hexa rear right side view

ஹெக்ஸா சர்வீஸ் மற்றும் வாரண்டி விபரம்

ஹெக்ஸா காரின் முதல் இலவச சர்வீஸ் 3 மாதங்கள் அல்லது 5000 கிமீ , 2வது இலவச சர்வீஸ் 6 மாதம் அல்லது 10,000 கிமீ , 3வது இலவச சர்வீஸ் 12 மாதங்கள் அல்லது 20,000 கிமீ அதற்கு மேல் ஒவ்வொரு 12 மாதங்கள் அல்லது 20,000 கிமீக்கு ஒருமுறை சர்வீஸ் மேற்கொள்ள வேண்டும். டாடா ஹெக்ஸா வாரண்டி 3 வருடங்கள் அல்லது 1.50 லட்சம் கிலோமீட்டர் ஆகும்.

டாடா ஹெக்ஸா  விலை பட்டியல்

டாடா ஹெக்ஸா விலை ரூ. 11.99 லட்சத்தில் தொடங்குகின்றது. இன்னோவா க்ரீஸ்ட்டா , எக்ஸ்யூவி500 போன்ற கார்களுக்கு நேரடியான சவாலாக விளங்கும் வகையில் டாடா ஹெக்ஸா விளங்கும்.

டாடா ஹெக்ஸா வேரியன்ட் விலை பட்டியல் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்)
XE  ரூ. 11.99 லட்சம்
XM ரூ. 13.85 லட்சம்
XT ரூ. 16.20 லட்சம்
XMA (Automatic) ரூ. 15.05 லட்சம்
XTA (Automatic) ரூ. 17.40 லட்சம்
XT (4×4) ரூ. 17.49 லட்சம்

 

டாடா ஹெக்ஸா வேரியன்ட் விலை பட்டியல் (சென்னை எக்ஸ்-ஷோரூம்)
XE  ரூ. 12.25 லட்சம்
XM ரூ. 13.85 லட்சம்
XT ரூ. 16.45 லட்சம்
XMA (Automatic) ரூ. 15.15 லட்சம்
XTA (Automatic) ரூ. 17.65 லட்சம்
XT (4×4) ரூ. 17.74 லட்சம்
டாடா ஹெக்ஸா கார் படங்கள்