2017 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் அறிமுகம்

ரூ. 10.75 லட்சம் ஆரம்ப விலையில் 2017 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எஞ்சின் தேர்வுகளிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்க தொடங்கியுள்ளது.

2017 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ

கூடுதல் வசதிகள் மற்றும் நிறத்தை பெற்ற சிறப்பு  வேரியன்டில் தோற்ற அமைப்பில் கருப்பு நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கருப்பினை பெற்ற 16 அங்குல அலாய் வீல், மேற்கூறையில் கருப்பு பூச்சூ, முன்பக்க கிரில், டெயில்கேட் மற்றும் டிஃப்யூசஸர் போன்றவற்றில் கருப்பு நிறத்தை பெற்றுள்ளது.

கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்க உள்ள மான்ட் கார்லோ மாடலின் இன்டிரியரில் கருப்பு நிறத்தை பெற்ற டேஸ்போர்டு மற்றும் இருக்கைகளுடன் 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ், இபிடி போன்றவ்வற்றுடன் முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பை ஆகியவற்றுடன் ரியர் பார்க்கிங் சென்சாரை பெற்றுள்ளது.

1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 105hp பவரை வெளிப்படுத்தும் மாடலில் 5 வேக மேனுவல் அல்லது 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110hp பவரை வெளிப்படுத்தும் மாடலில் 5 வேக மேனுவல் அல்லது 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும்.

மான்ட் கார்லோ ரேசிங் பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள காரின் போட்டியார்கள் வெர்னா, சிட்டி, சியாஸ், வென்ட்டோ ஆகியவை ஆகும்.

ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ விலை பட்டியல்

Skoda Rapid Monte Carlo 1.6 petrol MT: ரூ. 10.75 லட்சம்
Skoda Rapid Monte Carlo 1.6 petrol AT: ரூ. 11.97 லட்சம்
Skoda Rapid Monte Carlo 1.5 diesel MT: ரூ. 12.46 லட்சம்
Skoda Rapid Monte Carlo 1.5 diesel AT: ரூ. 13.57 லட்சம்

( இந்தியா எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல் )

Recommended For You