ரூ. 49.99 லட்சத்தில் 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

0

மூன்றாவது தலைமுறை 2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி மாடல் முதற்கட்டமாக இந்தியாவில் டீசல் வேரியன்டில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஆரம்ப விலை ரூ.49.99 லட்சம் ஆகும்.

2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி

சமீபத்தில் 20-வது ஆண்டு விழாவை கொண்டாடிய சென்னையில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற புதிய எக்ஸ்3 மாடல் முதற்கட்டமாக 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட xDrive 20d எக்ஸ்பிடேசன் மற்றும் xDrive 20d லக்சூரி லைன் ஆகிய இரண்டு விதமான வேரியன்டில் கிடைக்க உள்ளது.

Google News

ஆல் வீல் டிரைவ் அம்சத்தை நிரந்தரமாக பெற்று வந்துள்ள எக்ஸ்3 மாடலில் ட்வீன்பவர் டர்போ 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 190 ஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் இழுவைத் திறன் வழங்கவல்லதாக விளங்குகின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

CLAR பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்3 எஸ்யூவி மாடல் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட் அம்சத்தை பெற்று புதுப்பிக்கப்பட்ட பாரம்பரிய முகப்பு கிரிலுடன், எல்இடி பனி விளக்குகள் , 18 அங்குல அலாய் வீல் அல்லது ஆப்ஷனலாக 21 அங்குல அலாய் வீலை பெறலாம். இன்டிரியரில் புதுப்பிக்கப்பட்ட 6வது தலைமுறை ஐடிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆணெஃடராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களுடன் ஹீல் அசிஸ்ட் டிசென்ஃ கன்ட்ரோல் என பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.

ஆடி Q5, மெர்சிடிஸ் பென்ஸ் GLC, வால்வோ XC60, மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 45 டீலர்கள் வாயிலாக 31 நகரங்களில் பிஎம்டபிள்யூ டீலர்கள் இடம்பெற்றுள்ளது.

2018 BMW X3 Price list

BMW X3 xDrive20d Expedition – ரூ 49.99 லட்சம்

BWM X3 xDrive20d Luxury Line – ரூ 56.70 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)