Automobile Tamilan

ரூ.72.90 லட்சத்தில் வெளியான பிஎம்டபிள்யூ X5 எஸ்யூவியின் விபரம்

bmw x5

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள 4-ம் தலைமுறை பிஎம்டபிள்யூ X5 மாடலை மும்பையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்தார். முதற்கட்டமாக டீசல் என்ஜின் பெற்ற எக்ஸ் 5 கார்கள் கிடைக்க தொடங்கியுள்ளது..

சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற X5 எஸ்யூவ ரக மாடலில் ஸ்போர்ட்,X லைன் மற்றும் M ஸ்போர்ட்  என மொத்தம் மூன்று வேரியன்டுகளில் கிடைக்க உள்ளது.

பிஎம்டபிள்யூ X5 விலை மற்றும் வசதிகள்

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய தலைமுறை எக்ஸ்5 காரின் டீசல் மாடலில் 6 சிலிண்டர், 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகபட்சமாக 265bhp குதிரைத்திறன் மற்றும் 620Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. அடுத்ததாக BS VI விதிகளுக்கு உட்பட்ட 3 லிட்டர் டர்போ  பெட்ரோல் 6 சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 340bhp பவர் மற்றும் 450Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

இரு மாடல்களிலும் பொதுவாக 8 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. இந்த காரில் ஆல் வீல் டிரைவ் வசதியை xDrive என்ற பெயரில் வழங்குகின்றது.

பிஎம்டபிள்யூவின் புதுப்பிக்கப்பட்ட வடிவ மொழியை கொண்டு CLAR (Cluster Architecture) பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி காரில் மிக நேர்த்தியான கிட்னி கிரில் கொண்டு எல்இடி ரன்னிங் விளக்குகள், புதிய ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் கொண்டுள்ளது.

பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டுள்ள இந்த காரின் டேஸ்போர்டில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே கொண்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களாக சிறப்பான முறையில் பார்க்கிங் செய்ய பார்க்கிங் அசிஸ்ட் ப்ளஸ், 6 ஏர்பேக், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், டிராக்க்ஷன் கன்ட்ரோல், ஹில் அஸ்சிஸ்ட், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு சேஃப்டி, 360 டிகிரி கேமரா கொண்டுள்ள இந்த மாடலில் வெள்ளை, நீளம் மற்றும் கருப்பு நிறங்களுடன் 5 விதமான இன்டிரியர் நிறங்கள் கொண்டுள்ளது.

2019 BMW X5 Prices (ex-showroom, pan-India)

Exit mobile version