பிஎஸ்6 2020 நிசான் கிக்ஸ் எஸ்யூவி அறிமுகம் விபரம்

0

BS6 Nissan Kicks

முந்தைய கிக்ஸ் மாடலை விட 2020 நிசான் கிக்ஸ் எஸ்யூவி பல்வேறு வசதிகள் மற்றும் பிஎஸ்6 என்ஜின் போன்றவற்றை பெற்றுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷனை பெற உள்ளது.

Google News

ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது விலை அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில் கிக்ஸ் காரில் மொத்தம் XL, XV, XV பிரீமியம் மற்றும் XV பிரீமியம் (O) என மொத்தம் நான்கு வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது.

1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 156 ஹெச்பி மற்றும் 254 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதே போல XV, XV பிரீமியம் மற்றும் XV பிரீமியம் (O) போன்றவற்றில் மேனுவல் கியர்பாக்ஸூம், XV பிரீமியம் மற்றும் XV பிரீமியம் (O) மாடல்களில் சிவிடி கியர்பாக்ஸூம் வழங்கப்பட உள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 104 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த மாடலில் வேக மேனுவல் மட்டும் பெற்றுள்ளது. பேஸ் XL, XV மாடலில் மட்டும் இந்த என்ஜின் இடம்பெறும்.

சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற மாடலின் மைலேஜ் விபரம் வெளியாகவில்லை. மற்றபடி 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் போன்றவற்றின் மைலேஜ் ARAI சான்றிதழின் படி லிட்டருக்கு 16.3 கிமீ ஆகும்.

2020 கிக்ஸ் காரில் பல்வேறு கனெக்ட்டிவ் சார்ந்த தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் ஆன் அல்லது ஆஃப் போன்றவை இடம்பெறும்.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை நான்கு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மற்றும் ஹீல் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை இடம் பெற்றுள்ளது.

2020 நிசான் கிக்ஸ் மடாலில் வெள்ளி, கருப்பு, சாம்பல், சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் என ஆறு நிறங்களும், டூயல் டோன் நிறங்களில் கிரே / ஆரஞ்சு, சிவப்பு / கருப்பு மற்றும் வெள்ளை / கருப்பு. இந்த நிறங்கள் எக்ஸ்வி பிரீமியம் (O) வேரியண்டில் மட்டுமே வழங்கப்படும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர் மற்றும் 2020 ஹூண்டாய் கிரெட்டா ஆகியவற்றை நேரடியாக 2020 நிசான் கிக்ஸ் எதிர்கொள்ள உள்ளது.