இந்தியாவில் பிஎம்டபிள்யூ 530i M ஸ்போர்ட் கார் விற்பனைக்கு வந்தது

0

பிஎம்டபிள்யூ 530i M ஸ்போர்ட்

இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம், மிக நவீத்துவமான வசதிகள் மற்றும் அதிதீ செயல்திறனை வெளிப்படுத்தும் வகையிலான புதிய பிஎம்டபிள்யூ 530i M ஸ்போர்ட் காரை ரூபாய் 59.20 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது.

Google News

252 பிஎச்பி பவரை வழங்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்தை பெற்ற என்ஜினை கொண்டுள்ள இந்த காரில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் கார் சிறப்புகள்

எம் ஸ்போர்ட் மாடலில் வழக்கமான பாரம்பரிய கிட்னி கிரில் பெற்று அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டினை பெற்ற இந்த காரின் பக்கவாட்டில்  அலாய் வீல், நீல நிறத்திலான எம் பிரேக் காலிபர்கள், எம் வரிசை காருக்குரிய பேட்ஜ் கொண்டதாக வந்துள்ளது.

10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பிஎம்டபிள்யூ ஐ டிரைவ் டச், ஆப்பிள் கார் பிளே, பிஎம்டபிள்யூ ஆப்கள், பிஎம்டபிள்யூ நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களுடன் ஹார்மன் காரடன் 16 ஸ்பீக்கர்களை கொண்டதாக உள்ளது. பிரீமியம் தரத்திலான இருக்கைகள் மற்றும் இன்டிரியர் அம்சத்தை கொண்டதாக உள்ளது.

BMW 530i M Sport Interior

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 252 பிஎச்பி பவரையும், மற்றும் 350 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லதாக விளங்குகின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது. இந்த காரின் செயல்திறன் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.2 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும.

530ஐ எம் ஸ்போர்ட் காரில் 5 விதமான டிரைவிங் மோடுகள் இடம்பெற்றுள்ளது. அதாவது கம்போர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், ஈக்கோ, புரோ, மற்றும் அடாப்ட்டிவ் ஆகும். 360 டிகிரி கோணத்தில் காரை சுற்றி அறிய கேமரா, 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் உடன் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 530i M ஸ்போர்ட்