பிஎம்டபிள்யூ M5 காம்பெட்டிஷன் விற்பனைக்கு வெளியானது

0

bmw-m5-competition-launched-in-india-

இந்திய சந்தையில் பெர்ஃபாமென்ஸ் ரக பிஎம்டபிள்யூ M5 காம்பெட்டிஷன் செடான் ரக காரை ரூ.1.55 கோடி விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண எம்5 மாடலுக்கு மாற்றாக இந்த புதிய மாடல் அனைத்து பிஎம்டபிள்யூ டீலர்களிடமும் கிடைக்க உள்ளது.

Google News

M5 காம்பெட்டிஷன் மாடல் சாதாரண செடான் மாடலை விட பல்வேறு குறிப்பிடதக்க மாற்றங்களை கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள இந்நிறுவனத்தின் பாரம்பரிய கிட்னி கிரில், ORVM, பக்கவாட்டு ஏர் வென்ட், பின்புற டிஃப்பியூசர் மற்றும் ஸ்பாய்லர் ஆகியவற்றில் பளபளப்பான கருப்பு நிறத்தை பெற்று உள்ளன. எம்5 மாலில் இரட்டை வெளியேற்றம் மற்றும் எம் 5 காம்பெட்டிஷன் பேட்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வலிமையான கார்பன்-ஃபைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் (சி.எஃப்.ஆர்.பி) கூரையுடன் முன் மற்றும் பின்புற பம்பர்கள் சிறப்பாக உள்ளது.

உட்புறத்தில் இந்த மாடலில் மல்டி-ஃபங்க்ஷன் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், சீட் பெல்ட்கள், லெதர் சுற்றப்பட்ட மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங், சிவப்பு நிற ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான் மற்றும் பெடல்கள் கொண்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங், பி.எம்.டபிள்யூ ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD), வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே ஆதரவு, 600 வாட்ஸ் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கொண்டுள்ளது.

616 பிஹெச்பி பவர் மற்றும் அதிகபட்சமாக 750 Nm வெளிப்படுத்தும் வி8 சிலிண்டர் 4.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் M xDrive ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் 4WD, 4WD Sport மற்றும் 2WD என மூன்று விதமான மோடுகள் உள்ளது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.3 விநாடிகளை எடுத்துக் கொள்ளும்.

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள பிஎம்டபிள்யூ M5 காம்பெட்டிஷன் விலை 1.55 கோடி ரூபாய் (எக்ஸ்ஷோரூம் இந்தியா) ஆகும்.