ரூ.4.99 லட்சம் முதல் பிஎஸ்6 ரெனோ ட்ரைபர் விற்பனைக்கு வெளியானது

0

renault triber mpv

ரெனோ இந்தியா நிறுவனத்தின் பிஎஸ் 6 என்ஜினை பெற உள்ள ட்ரைபர் மற்றும் க்விட் கார்கள் குறித்தான முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விற்பனையில் கிடைத்து வருகின்ற மாடலை விட ரூ.10,000 முதல் ரூ.29,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளது.

Google News

பிஎஸ் 6 என்ஜினை பெற உள்ள ட்ரைபர் மற்றும் க்விட் காருக்கு பெரும்பாலான டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. குறிப்பாக க்விட் காரின் 1.0 லிட்டர் மாடலுக்கு முதற்கட்டமாக முன்பதிவு நடைபெறுகின்றது. 0.8 லிட்டர் பிஎஸ்6 என்ஜினுக்கு மாற்றுப்படுவது சற்று தாமதமாகவோ அல்லது இந்த என்ஜின் கைவிடப்படலாம். மார்ச் மாதம் வரை பிஎஸ்4 கார்களை ரெனால்ட் விற்பனை செய்ய உள்ளது.

ட்ரைபர் காரில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக கிடைக்கின்றது.

ரெனால்டின் ட்ரைபரில் அடிப்படையாக அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட், டூயல் முன்பக்க ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி, பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், மற்றும் உயர் ரக மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கொண்டதாக விளங்கும்.

இதுதவிர டாப் வேரியண்டில் அதிகபட்சமாக நான்கு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும். ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் உட்பட பக்கவாட்டு ஏர்பேக் மற்றும் முன் ஏர்பேக் வழங்கப்பட்டிருக்கும்.

தற்போது இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள ரெனோ ட்ரைபர் பிஎஸ்6 விலை விபரத்தின் படி…

RxE ரூ. 4.99 லட்சம்

RxL ரூ. 5.74 லட்சம்

RxS ரூ. 6.24 லட்சம்

RxZ ரூ. 6.78 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)