• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.12.78 லட்சத்தில் ஹூண்டாய் க்ரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்

by MR.Durai
2 August 2019, 6:00 pm
in Car News
0
ShareTweetSend

hyundai creta sports

இந்தியாவில் சிறப்பு பதிப்பாக ஹூண்டாய் க்ரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசன் பல்வேறு கூடுதலான வசதிகளை கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள SX வேரியண்டை அடிப்படையாக கொண்ட கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடலில் ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு, உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநரின் இருக்கை, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் கூடிய 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,  க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் போன்றவற்றுடன் பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.

1.6 லிட்டர் பெட்ரோல் 123 ஹெச்பி பவர் மற்றும் 151 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 128 ஹெச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இரண்டிலும் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஸ்போர்ட்ஸ் எடிசன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் வந்துள்ளது.

குறிப்பாக கிரெட்டா ஸ்போர்ட்ஸ் பதிப்பில் தோற்ற அமைப்பில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் புரொஜெக்டர் ஹெட்லைட்டிற்கு ஸ்மோக்டு எஃபெக்ட், முன்புற கிரிலுக்கு கருப்பு நிறத்துடன் குரோம் பூச்சு, சில்வர் ரூஃப் ரெயில், ஸ்கிட் பிளேட், குரோம் நிறத்தில் சைலென்சர், கருப்பு நிறத்தில் ரியர்வியூ கண்ணாடி மேற்பகுதி மற்றும் ரியர் ஸ்பாய்லர் போன்றவை பெற்றுள்ளது.

கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசனில் இன்டிரியருக்கு கருப்பு நிறம், ‘கிரெட்டா’ என பொறிக்கப்பட்ட லெதர் இருக்கைகள், ஸ்டீயரிங் மற்றும் கியர் லீவர் பூட், ஏசி வென்ட்டை சுற்றி சல்வர் ஃபினிஷ் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் கொண்டுள்ளது.

சாதாரண க்ரெட்டா SX வேரியண்டை விட அதிகபட்சமாக ரூ.60,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசன் விலை ரூ. 12.78 லட்சம் (பெட்ரோல்) மற்றும் டீசல் மாடல் விலை ரூ.14.13 லட்சம் ஆகும்.

(எக்ஸ்ஷோரூம்)

hyundai creta sports hyundai creta sports

Related Motor News

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய்

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

Tags: Hyundai Creta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan