Automobile Tamilan

கியா சோனெட் ஜிடி லைன் Vs டெக் லைன் வித்தியாசங்கள் என்ன ?

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கியா சோனெட் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள பிரீமியம் வேரியண்ட் ஜிடி லைன் மற்றும் சாதாரன டெக் லைன் என இரு வேரியண்டுகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம்.

கான்செப்ட் நிலையிலிருந்து நேரடியாக உற்பத்தி நிலை மாடலுக்கு கொண்டு வந்துள்ள கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் வென்யூ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சோனட்டை வித்தியாசப்படுத்தி தோற்ற அமைப்பில் பெரிதும் மாற்றப்பட்டு, அதே நேரத்தில் இன்டிரியரிலும் கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது.

சோனட்டின் என்ஜின் டிரான்ஸ்மிஷன் விபரம்

சொனெட்டில் வழங்கப்பட உள்ள மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் இரண்டு பெட்ரோல் மற்றும் டீசல் என கிடைக்க உள்ளது. இதில்  83 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் டெக் லைன் வேரியண்டில் மட்டும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றிருக்கும்.

120 PS மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் மூன்று விதமான கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது. இதில் 6 வேக மேனுவல், 6 வேக ஐஎம்டி மற்றும் 7 வேக டிசிடி என வழங்கப்பட உள்ளது. இந்த என்ஜின் பிரத்தியேகமாக ஜிடி லைன் வேரியண்ட்டில் மட்டுமே பெற்றிருக்கும்.

100 PS மற்றும் 240 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்ற சோனெட்டில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். இதில் டெக் லைன் மாடல் மேனுவல் பெற்றதாகவும், ஜிடி லைன் வேரியண்டில் மட்டும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இடம்பெறும்.

மேலும் 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் உள்ள மாடல்களில் டீசல் என்ஜின் ஆப்ஷனில் டார்க் ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் பெறும் முதல் மாடலாக சொனட் விளங்குகின்றது.

இன்டிரியர் வித்தியாசங்கள்

குறிப்பாக கியா சோனெட் இன்டிரியரில் ஜிடி லைன் மாடல் மிகவும் பிரீமியமான வசதிகளை பெற்று கேபினில் முழுமையாக கருப்பு நிறத்தைப் பெற்று இருக்கைகளில் ஸ்டிச் செய்யப்பட்ட சிவப்பு நிற நூல், கியர் நாப், கதவு, ஸ்டீயரிங் வீல் மற்றும் ஆம்பியன்ட் லைட், மாறுபட்ட அலுமனிய பெடல்கள் என அனைத்திலும் சிவப்பு நிறமும், இருக்கைகளில் ஜிடி லைன் லோகோ கொடுக்கப்பட்டுள்ளது.

டெக் லைன் வேரியண்டில் கருப்பு மற்றும் பீஜ் கலவையுடன் கூடிய டேஸ்போர்டு மற்றபடி சிவப்பு நிற அசென்ட்ஸ் இணைக்கப்படவில்லை.

சோன்ட்டின் தோற்ற மாறுதல்கள்

ஜிடி லைன் வேரியணுடில் பிரீமியம் தோற்றத்தை வழங்கும் வகையில் முன்புற டைகர் நோஸ் கிரிலில் ஜிடி லைன் லோகோ, சிவப்பு நிற பிரேக் காலிப்பர், மேற்கூறை ரெயில் கருப்பு நிறம் மற்றும் பம்பரில் சிறிய அளவிலான வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டெக் லைன் வேரியண்டில் சிவப்பு நிறம் நீக்கப்பட்டு பம்பர் அமைப்பிலும் சாதாரணமாகவே அமைந்துள்ளது.

பிரீமியம் டிசைன் சற்று கூடுதலான கவனத்தை பெறுகின்ற ஜிடி லைன் வசதிகளில் டிசிடி ஆட்டோ, டிராக்‌ஷன் கன்ட்ரோல், டர்போ பெட்ரோல் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றது.

இரண்டில் எந்த வேரியண்ட் லைன் பெஸ்ட் ?

கூடுதல் டிசைன் வசதிகள் காரின் கவனத்தை ஈர்க்கின்ற நிலையில், டர்போ பெட்ரோல் என்ஜின் கவனத்தைப் பெறுகின்றது. டெக் லைன் வழக்கமான மாடலாக காட்சிக்கு கிடைக்கின்றது.

கியா சோனெட் முதல் பார்வை வீடியோ

 

 

Exit mobile version