Automobile Tamilan

கியா சொனெட் காரின் இன்டிரியர் ஸ்கெட்ச் வெளியீடு

வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள கியா மோட்டாரின் சொனெட் எஸ்யூவி காரின் டீசர் உட்பட டிசைன் ஸ்கெட்ச் என இப்போது இன்டிரியர் ஸ்கெட்ச் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகத்தை தொடர்ந்து உடனடியாக முன்பதிவு துவங்கப்பட உள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இன்டிரியர் படத்தில் மிக நேர்த்தியான டேஸ்போர்ட் அமைப்பு கொடுக்கப்பட்டு டூயல் டோன் பெற்று 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கனெகட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்ட UVO நுட்பம் கொண்டிருக்கும். அதே நேரத்தில் குறைந்த வசதி பெற்ற பேஸ் வேரியண்டில் 2 டின் ஆடியோ சிஸ்டம் மட்டும் இடம்பெற்றிருக்கும்.

மூன்று ஸ்போக் பெற்ற ஸ்டீயரிங் வீலுடன் மிக நேர்த்தியாக ஏசி வென்ட் கொடுக்கப்பட்டு, சென்டர் ஆர்ம் ரெஸ்ட், போஸ் சவுன்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளுடன் விளங்குகின்றது.

 

ஆட்டோமேட்டிக் வேரியண்ட் வருவதனை உறுதி செய்துள்ள கியா நிறுவனம் கூடுதலாக சொனெட் எஸ்யூவி காரில் ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் வழங்க உள்ளது.

எக்ஸ்டீரியரை பொறுத்தவரை முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட சொனெட் கான்செப்ட்டின் பெரும்பாலான டிசைன் வடிவத்தை உற்பத்தி நிலைக்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இந்நிறுவன பாரம்பரிய ‘Tiger Nose’ கிரில் மிக நேர்த்தியான எல்இடி விளக்குகள், இரு நிற கலவை போன்றவற்றை கொண்டிருக்கும்.

பிஎஸ் 6 ஆதரவை பெற்ற 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆகியவற்றினை பெற உள்ளது. செல்டோஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் சற்று பவர் குறைக்கப்பட்டு வெளியிடப்படலாம்.

இந்த காரில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ், 7 வேக DCT ஆட்டோமேட்டிக் மற்றும் பதிதாக வரவுள்ள ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் கிடைக்க உள்ளது.

4 மீட்டருக்கு குறைவான நீளமுள்ள கார்களுக்கு போட்டியாக விளங்க உள்ள கியா எஸ்யூவி ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் தொடக்க வாரத்தில் வெளியாகலாம்.

Exit mobile version