ரூ.5.01 கோடி விலையில் லம்போர்கினி அவென்டேடார் எஸ் விற்பனைக்கு வந்தது

ரூ.5.01 கோடி விலையில் இந்தியாவில் லம்போர்கினி அவென்டேடார் எஸ் சூப்பர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலான பவர் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இகோ மோடினை பெற்று விளங்குகின்றது.

லம்போர்கினி அவென்டேடார் எஸ்

முந்தைய காரை விட 130 சதவீத கூடுதல் டவுன் ஃபோர்ஸ் கொண்டுள்ள லம்போர்கினி அவென்டேடார் எஸ் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக விளங்குகின்றது. மேலும் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரியர் விங் வாயிலாக 50 சதவீத கூடுதல் டவுன்ஃபோர்ஸ்கிடைக்கின்றது.

லம்போர்கினி அவென்டேடார் S காரில் 40 ஹெச்பி கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு 740 ஹெச்பி பவர் , 690 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது.

0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் எட்டிவிடும். அவென்டேடார் எஸ் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோ மீட்டர் ஆகும். முந்தைய ஸ்டெரடா ,ஸ்போர்ட் , கோர்ஸா மோட் டிரைவ்களுடன் கூடுதலாக இகோ மோட் சேர்க்கப்பட்டுள்ளது.

முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்ற லம்போர்கினி அவென்டேடார் எஸ் கார் விலை ரூ. 5.01 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

<h3>2017 லம்போர்கினி அவென்டேடார் S படங்கள்</h3>

Recommended For You