ரூ.8.50 லட்சத்தில் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்

0

mahindra tuv300

பல்வேறு புதிய தோற்ற மாற்றங்கள் உட்பட பாதுகாப்பு அம்சங்களை கூடுதலாக பெற்ற மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra TUV300) எஸ்யூவி இந்தியாவில் ரூ.8.50 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Google News

மேம்படுத்தபட்ட மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியின் தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பெற்று முந்தைய மாடலை விட ரூ.10,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்

பாக்ஸ் வடிவ டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்ட இந்த டியூவி300 எஸ்யூவி காரில் ஓட்டுநர் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், இருக்கை பட்டை வார்னிங் சிஸ்டம், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை அனைத்து வேரியன்டிலும் பெற்றுள்ளது.

Mahindra TUV300 dashboard

முன்புறத்தில் பியானோ கருப்பு நிறத்தில் புதிய கரில், ஸ்மோக்டு ஹெட்லைட் உடன் பகல் நேர ரன்னிங் விளக்குகள், ஸ்கிட் பிளேட், புதிய டெயில் லைட், X- வடிவ ஸ்பேர் வீல் கவர் போன்றவற்றுடன் புதிதாக ஹைவே ரெட் மற்றும் மிஸ்டிக் காப்பர் என இரு விதமான நிறங்களில் வந்துள்ளது.

டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரில் ரிவர்ஸ் கேமரா உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது. மைக்ரோ ஹைபிரிட் டெக்னாலாஜி அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது.

மேலும் டியூவி300 எம்ஹாக் 100 இஞ்ஜின் ஆப்ஷனிலும் டியூவி300 எஸ்யூவி 102 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 240 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

TUV300 Ex-showroom Prices (in Rs.) CHENNAI
T4+ 100 HP 8,50,518
T6+ 100 HP 9,11,110
T8 100 HP 9,74,889
T10 9,99,996
T10 Dual Tone 10,24,770
T10 OPT 10,27,193
T10 OPT Dual Tone 10,51,968

2019 Mahindra TUV300 interior mahindra tuv300 rear