மாருதி சுசுகி வெளியிட்ட பிஎஸ்6 ஆல்ட்டோ சிஎன்ஜி விலை விபரம்

0

maruti alto

மாருதி சுசுகி பயணிகள் வாகன தயாரிப்பாளரின் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல்களில் ஒன்றான ஆல்ட்டோ காரில் எஸ்-சிஎன்ஜி பெற்ற மாடல் ரூ.4.32 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Google News

மூன்று சிலிண்டரை பெற்ற ஆல்ட்டோ சிஎன்ஜி மாடல் அதிகபட்சமாக 41hp பவர் மற்றும் 60Nm டார்க் வழங்கவல்லதாகும். LXi  வேரியண்டில் பவர் ஸ்டீயரிங், ஏசி, முன்புறத்தில் பவர் விண்டோஸ் போன்றவற்றை கொண்டதாகவும், LXi (O) மாடலில் ஏர்பேக் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கும்.

மாருதி ஆல்ட்டோ சிஎன்ஜி மைலேஜ் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 31.59 கிமீ வழங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்பாக விற்பனைக்கு கிடைத்து வருகின்ற பிஎஸ்6 என்ஜினை பெற்ற அல்ட்டோ 1,00,000 -க்கு அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செயப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் பிஎஸ்6 அறிமுகத்திற்கு முன்னதாகவே 5,00,000 யூனிட்டுகளை மாருதி விற்பனை செய்துள்ளது.

Alto BS6 LXi S-CNG – Rs. 432,700/-
Alto BS6 LXi (O) S-CNG – Rs. 436,300/-.

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)