இந்த மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்துகிறது மாருதி சுஸூகி

0

இந்தியாவில் மாருதி சுஸூகி கார்களின் விலை இந்த மாதத்தில் உயரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒவ்வொரு மாடல்களுக்கும் எவ்வளவு விலையை உயர்த்தலாம் என்பதை நிர்ணயிக்கும் பணி நடைபெற்று வருகிறது உற்பத்தி பொருட்களுக்கான விலை உயர்வு, அந்நிய செலாவணியில் நிலவும் ஏற்ற இறக்க சூழல், எரிபொருள் விலை உயர்வு ஆகியவையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இந்திய விற்பனைப் பிரிவு மூத்த செயல் இயக்குனரான ஆர்.எஸ்.கல்ஸி,  ஒவ்வொரு மாடல்களுக்கும் எவ்வளவு விலையை உயர்த்தலாம் என்பதை நிர்ணயிக்கும் பணி நடைபெற்று வருவதாக உற்பத்தி பொருட்களுக்கான விலை உயர்வு, அந்நிய செலாவணியில் நிலவும் ஏற்ற இறக்க சூழல், எரிபொருள் விலை உயர்வு ஆகியவையே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

Google News

இந்த விலை விற்பனையில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என்று மாருதி சுஸூகி நம்பிக்கையுடன் உள்ளது. இந்த பிராண்ட் தற்போது மாருதி சுசூகி அரினா மற்றும் நெக்ஸ ஆகிய கார்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய எர்டிகா மற்றும் ஒரு புதிய சிறிய எஸ்யூவி கார்களும் விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையே டாடா, மகிந்திரா கார்களின் விலையும் உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது