எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி படங்களை வெளியிட்ட மாருதி சுசுகி

maruti spresso suv

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் இன்டிரியர் படங்களை மாருதி சுசுகி முதன்முறையாக வெளியிட்டு அசத்தியுள்ளது. மிகவும் ஸ்டைலிஷான அமைப்பினை வெளிப்படுத்த டேஸ்போர்டின் மத்தியில் கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இணைத்துள்ளது.

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட்டின் இன்டிரியருக்கு இணையாகவே உற்பத்தி நிலை மாடலை மாருதி உருவாக்கியுள்ளது.  டாஷ்போர்டின், மையமாக பொருத்தப்பட்ட டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் டேக்கோமீட்டரைக் கொண்டுள்ளது. அதன் கீழே மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு, ஸ்பீடோமீட்டர் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட ஒரு பெரிய வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளன, இந்த மினி எஸ்யூவிக்கு கூடுதல் அழகாக விளங்குகின்றது. வட்ட வட்டத்தின் இருபுறமும் மத்தியயில் ஏசி வென்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

வேகன் ஆர் மற்றும் பிற மாருதி மாடல்களில் காணப்படும் அதே ஸ்டீயரிங் உடன் எஸ்-பிரெஸ்ஸோ வந்துள்ளது. ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் போன் கட்டுப்பாடுகள், கைமுறையாக சரிசெய்யக்கூடிய விங் மிரர், முன்புற பவர் விண்டோஸ், 12 வோல்ட் சாக்கெட், யூ.எஸ்.பி மற்றும் ஆக்ஸ் உள்ளீடுகளை கொண்டுள்ளது.

maruti spresso dashboard

விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி தோற்ற உந்துதலை முன்புறத்தில் பெற்றுள்ள இந்த எஸ்-பிரெஸ்ஸோ காரின் முகப்பு கிரில் அமைப்பு நேர்த்தியாக உள்ளதை தொடர்ந்து பம்பரில் எல்இடி ரன்னிங் விளக்குகள், கருப்பு நிற பம்பர், க்ரோம் பூச்சூ அல்லாத தோற்றம், 14 அங்குல சாதாரன ஸ்டீல் வீல் கருப்பு நிறத்தில் பெற்றுள்ளது.

எஸ்-பிரஸ்ஸோ காரில், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்கும். 50 கிலோவாட் (67.98 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும்.

maruti spresso suv interior

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் டீலர்கள் வாயிலாக முன்பதிவு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வரவுள்ள 2019 ரெனோ க்விட், டட்சன் ரெடி-கோ மாடலை நேரடியாக எதிர்கொள்ள உள்ள எஸ்-பிரெஸ்ஸோவின் விலை ரூ.3.30 லட்சத்தில் தொடங்கலாம்.

maruti spresso suv maruti spresso suv