ஹெக்டர் எஸ்யூவி விலையை ரூ.40,000 உயர்த்திய எம்ஜி மோட்டார்

mg hector suv launched price

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக மாடலான ஹெக்டர் காரின் விலையை அதிகபட்சமாக 2.5 % வரை உயர்த்தியுள்ளது. மேலும் மீண்டும் முன்பதிவு ஆன்லைன் மற்றும் டீலர்கள் வாயிலாக தொடங்கப்படுள்ளது. இந்தியாவின் முதல் இணைய கார் என அழைக்கபடுகின்ற ஹெக்டரின் உற்பத்தி எண்ணிக்கையை நவம்பர் மாதம் முதல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், நவம்பரில் இருந்து இரண்டாவது ஷீஃபட்டை இந்நிறுவனம் தொடங்க உள்ளது.

ரூ.50,000 செலுத்தி எம்ஜியின் இணையதளம் அல்லது 120க்கு மேற்பட்ட இந்நிறுவன டீலர்கள் வாயிலாக மேற்கொள்ளலாம். கடந்த செப்ட்ம்பர் 25 ஆம் தேதிக்கு பிறகு புதிய விலை நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த காரின் விலையை அதிகபட்சமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை உயர்த்தியுள்ளது.

முன்பதிவுகளை மீண்டும் திறப்பது குறித்து எம்.ஜி. மோட்டார் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி கௌரவ் குப்தா கூறுகையில், “எம்.ஜி. ஹெக்டருக்கு கிடைத்த வரவேற்பில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். வாடிக்கையாளர் திருப்திக்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, எம்ஜி பிராண்டின் அறிமுகத்தின் போது முழு நம்பிக்கையை வெளிப்படுத்திய எங்கள் முதல் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு அறிமுக விலைகளைத் தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். எங்கள் புதிய முன்பதிவுகளை விரைவாக வழங்குவதற்காக எங்கள் உற்பத்தி வேகத்தை விரைவுபடுத்துவதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

ஹெக்டர் எஸ்யுவி பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும்.

எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் டீசல் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.

mg hector engine specs

எம்ஜி ஹெக்டர் விலை பட்டியல்

mg hector suv new price list