விரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

mg zs ev

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அடுத்த மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி ZS EV காரின் முதன்முறையாக டீசரை வெளியிட்டுள்ளது. இந்த கார் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 250 கிமீ பயணத்தை மேற்கொள்ளும் திறனுடன் அறிமுகம் செய்யப்படலாம்.

ஹெக்டர் எஸ்யூவி அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் அடுத்த காராக வரவுள்ள இசட்எஸ் ஆனது சர்வதேச அளவில் சில நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் டிசம்பர் மாத இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கிடைக்கப் பெறவாய்ப்புகள் உள்ளது.

எம்ஜி எலெக்ட்ரிக் ZS மாடலில் பொருத்தப்பட்டுள்ள 44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், NEDC சான்றிதழ் படி அதிகபட்சமாக 262 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். இந்த பேட்டரியை 7kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.

இந்தியாவில் முதன்முறையாக 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை முன்னணி மெட்ரோ நகரங்களில் Fortum என்ற நிறுவனத்துடன் இணைந்து ஏற்படுத்த எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் எலக்ட்ரிக் மாடலுக்கு தயாரிக்கப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் ரூ.25 லட்சம் ஆக டிசம்பர் 2019 -ல் விற்பனைக்கு வெளியிட உள்ளது.