அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர உள்ளது ஆடி Q3

ஆடி நிறுவனம் இரண்டாம் தலைமுறைக்கான Q3 கார்களை எதிர்காலத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆடி Q3 கார்கள், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும், தாராளமாக உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள பதிப்பாக்க இருப்பதோடு, மெச்சுரிட்டி பெற்ற ஸ்டைல் கார்களாகவும் இருக்கும்.

புதிய Q3-இல் லிம்மான LED ஹெட் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பெரியளவிலான முன்புற கிரில் மற்றும் அதிகளவிலான சோல்டர் லைன்கள், தேர்வு செய்யப்பட்ட டிசைன் காண்டிராஸ்ட்களுடன் கூடிய ஸாப்டர் ஷேப்கள் ஆகிவையும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய Q3 கார்களின் கேபின் முந்தைய மாடல்களை ஒப்பிடும் போது அதிக இடவசதி கொண்டதாக இருக்கும்.

காரில் பின் பகுதி, மாற்றியமைக்கும் வகையிலான ப்ளோர்-களுடனும், 675 லிட்டர் லக்கேஜ்களை வைத்து கொள்ளும் வகையிலும் உள்ளது. இதுமட்டுமின்றி, 1,525 லிட்டர் லக்கேஜ்களை வைத்து கொள்ளும் வகையில் இதை விரிவு படுத்தவும் முடியும். இதற்காக பின்பக்க சீட்கள் 40/20/40 என்ற அளவில் பிரித்து மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், அடப்டிவ் டேம்பர் தொழில்நுட்பம் மற்றும் நீளமான பட்டியலுடன் கூடிய டிரைவர் அசிஸ்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில், குருஸ் மற்றும் பார்கிங் அசிஸ்ட் வசதிகள், பாதசாரிகள் செல்வதை பார்க்கும் வகையிலான 360 டிகிரி காமிராவும் உள்ளது.  மேலும் கூகிள் எர்த் மேப்ஸ் மற்றும் வாய்ஸ் கமாண்ட்களை அறிந்து கொள்ளும் வசதி கொண்ட விட்டுவல் காக்பிட் (Vitual Cockpit) ஆப்சனலாக இடம் பெற்றிருக்கும்.

டைப் C கனெக்டர்களுடன் கூடிய இரண்டு USB போர்ட்களும் முன்புறமும், 12v சார்ஜிங் சாக்கேட்டுடன் கூடிய இரண்டு USB போர்ட்களும் பின்புறமும் உள்ளது. ஸ்மார்ட் போன்களை கனெக்ட் செய்து கொள்ள ஆப்பிள் கார் பிளே’ மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியவைகளுக்கும் கிடைக்கிறது.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட முந்திய தலைமுறை மாடல்கள் 150hp திறனுடனும், 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் கார்கள் 150hp திறன் மற்றும் 184hp திறனுடன் இருந்த்தது.