ரூ.1.82 கோடியில் புதிய போர்ஷே 911 கார் இந்தியாவில் அறிமுகம்

0

Porsche 911 Carrera S Convertible

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய போர்ஷே 911 கார் 8-வது தலைமுறை மாடலாகும். புதிய 992 வரிசையில் வெளியிடப்பட்டுள்ள 911 கார்கள் கடந்த தலைமுறையின் அடிப்படையான வடிவத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Google News

முந்தைய மாடலை விட 30 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 30 என்எம் முறுக்கு விசை அதிகரிக்கப்பட்டுள்ள புதிய மாடலில் 3.0 லிட்டர் ட்வீன் டர்போ சார்ஜ்டு என்ஜின் பெற்றுள்ளது.

புதிய போர்ஷே 911 காரின் சிறப்புகள்

போர்ஷே 911 கரீரா S மற்றும் 911 கரீரா S கேப்ரியோலே என இரு மாடலிலும் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு  பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 450 HP குதிரைத்திறன் , 530 என்எம் முறுக்கு விசை திறனையும் வழங்கின்றது. இந்த மாடலில் 8 வேக டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 308 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றதாக உள்ளது.

இந்த காரின் தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களை மட்டும் பெற்றுள்ளது. புதிய எல்இடி ஹெட்லைட், புதுப்பிக்கப்பட்ட ஸ்பாய்லர், ஒஎல்இடி டெயில் லைட் போன்றவை கொண்டுள்ளது. குறிப்பாக இன்டிரியரில் 10.9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் , ஸ்டீயரிங் வீலில் டிரைவிங் மோடு  உள்ளிட்ட வசதிகளுடன் வந்துள்ளது.

911 Carrera S Coupe – ரூ. 1.82 கோடி
911 Carrera S Cabriolet – ரூ.. 1.99 கோடி

all prices, ex-showroom