விரைவில்., புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக விபரம்

0

ஹூண்டாய் கிரெட்டா

இந்தியாவின் முதன்மையான எஸ்யூவி மாடலாக விளங்கும் ஹூண்டாய் கிரெட்டா காரின் புதிய தலைமுறை மாடல் மாரச் 2020-ல் பிஎஸ்-6 மாசு விதிகளுக்கு உட்பட்ட மாடலாக விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Google News

கடந்த ஏப்ரலில் ஷாங்காய் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஹூண்டாய் iX25 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இதன் அடிப்படையிலான புதிய தலைமுறை கிரெட்டா எஸ்யூவி வெளியிடப்பட உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் iX25 என்ற பெயரில் விற்பனை செயப்படுகின்றது.

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

அடுத்த தலைமுறை காரில் தொடர்ந்து தற்போது உள்ள என்ஜின் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான அம்சத்தை கொண்டதாக  1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரு என்ஜின் தேர்வில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி வெளியாகலாம்.

சமீபத்தில் வெளியான வெனியூ எஸ்யூவி காரில் இடம்பெற்றிருந்தைப் போன்றே புதிய கிரெட்டா காரில் ப்ளூலிங்க் டெக்னாலாஜி வழங்கப்பட்டிருக்கும். இந்த நுட்பத்தின் மூலம் பல்வேறு ஸ்மார்ட் டெக் வசதிகளை கொண்ட மாடலாகவும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இ-சிம் கார்டு பொருத்தப்பட்டு நேரடியாக இணைய வசதியை பெற்றதாக கிரெட்டா வெளியாகுவது உறுதியாகியுள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மாடலின் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான விற்பனைக்கு வெளியாக உள்ளது.