Site icon Automobile Tamil

அக்டோபர் 18ல் இந்தியாவில் அறிமுகமாகிறது நிசான் கிக்ஸ்

நிசான் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கிக்ஸ் கார்களை, வரும் 18ம் தேதி இந்தியா மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த காரின் டீசர் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த குறித்த அறிவிப்பை நிசான் நிறுவனம் அறிவித்திருந்தது.

நிசான் கிக்ஸ் காரின் இந்திய ஸ்பெசிபிகேஷன்கள், ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிசான ரேரனோ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார்களும் முந்தைய மாடல்கள் போன்று நீளமாகவும் ஒரே அளவிலான வீல்பேஸ்-ஐயும் கொண்டுள்ளது. இந்த காரின் சீட்கள் சர்வதேச அளவில் வெளியிட்டப்பட்ட கார்களின் ஸ்பெக் போன்றே வெளியாகியுள்ளது. காரின் உள்புறத்தில் 8 இன்ச் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் சில பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளது.

இந்த நிசான் கிக்ஸ் கார்கள் பெட்ரோல், மற்றும் டீசல் என இரண்டு ஆப்சன்களிலும் வெளியாக உள்ளது. பெட்ரோல் வெர்சன்களில் 1.5 லிட்டர் இஞ்சின்களுடன் 104bhp ஆற்றலுடன் 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் CVT-ஐயும் கொண்டுள்ளது. டீசல் கார்களில் 1.5 லிட்டர் இஞ்சின்களுடன் 108bhp ஆற்றலுடன் 6-ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது.

புதிய நிசான் கிக்ஸ் கார்களின் விலை 9.5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை (எக்ஸ் ஷோரூம் விலை) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்கள் ஹூண்டாய் கிரட்டா மற்றும் ரெனால்ட் கேப்சர் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

Exit mobile version