9.55 லட்சம் ரூபாய்க்கு நிசான் கிக்ஸ் எஸ்யூவி வெளியானது

nissan kicks suv

இந்திய சந்தையில் புதிதாக நிசான் கிக்ஸ் எஸ்யூவி மாடல் 9.55 லட்சம் ரூபாய் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. கிக்ஸ் டீசல் மாடல் 10.85 லட்சம் ரூபாயில் தொடங்குகின்றது.

நிசான் கிக்ஸ் எஸ்யூவி

ரெனோ-நிசான் கூட்டு நிறுவனத்தின் மேம்பட்ட புதிய M0 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட கிக்ஸ் மாடலில் பல்வேறு நவீன அம்சங்கள் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

nissan kicks

ரெனோ கேப்டூர் காரில் இடம்பெற்றுள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் தேர்வுகளில் கிக்ஸ் கிடைக்க உள்ளது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 BHP பவர், 142 NM டார்க் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. கிக்ஸ் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 BHP பவர், 240 NM டார்க் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

5 இருக்கை கொண்ட கிக்ஸ் மாடலில் இந்தியாவில் முதன்முறையாக க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரக பிரிவில் இடம்பெற உள்ள அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படுகிற 360-டிகிரி கோணத்திலான 4 கேமராக்கள் காரை சுற்றி அமைக்கப்பட்டு அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியை பெற்றதாக வந்துள்ளது.

nissan kicks dashboard

மேலும், இந்த காரில் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதியுடன், 17 அங்குல அலாய் வீல், எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கு, 8 வழிகளில் ஒட்டுநர் இருக்கை மாற்றம், ப்ளூடுத், யூஎஸ்பி , Aux-இன் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது.

XL, XV, XV Premium மற்றும் XV Premium Option என மொத்தமாக நான்கு வகையான மாறுபாட்டை பெற்றுள்ளது. குறிப்பாக வழங்கப்பட்டுள்ள 7 நிறங்கள் அனைத்து வேரியன்டிலும், டூயல் டோன் நிறங்கள் டாப் XV Premium Option வேரியன்டில் மட்டும் கிடைக்கும்.

nissan kicks rear

நிசான் கிக்ஸ் எஸ்யூவி விலை பட்டியல்

XL பெட்ரோல் ரூ. 9.55 லட்சம்
XV பெட்ரோல் ரூ. 10.95 லட்சம்
XL டீசல் ரூ. 10.85 லட்சம்
XV டீசல் ரூ. 12.49 லட்சம்
XV Premium (டீசல்) ரூ. 13.65 லட்சம்
XV Premium + (டீசல்) ரூ. 14.65 லட்சம்

( எக்ஸ்-ஷோரூம் இந்தியா )

ரெனோ கேப்டூர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ் போன்றவற்றை எதிர்கொள்ளும் மாடலாக நிசான் கிக்ஸ் எஸ்யூவி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.