மேக்னைட் எஸ்யூவி காரின் உற்பத்தியை துவங்கிய நிசான்

0

Nissan Magnite production begins

சப் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் புதிய வரவாக வரவிருக்கும் மேக்னைட் எஸ்யூவி காரின் உற்பத்தியை துவங்கிய நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஒரகடம் ஆலையில் துவங்கியுள்ளது. உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால் விரைவில் முன்பதிவு மற்றும் விற்பனை துவங்கப்படலாம்.

Google News

இன்ஜின் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மேக்னைட் எஸ்யூவி மாடலில் 95 hp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதவிர சாதாரன 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவருடன் வரக்கூடும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெறக் கூடும்.

ரெனோ-நிசான் கூட்டு நிறுவனத்தின் CMF-A+ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படுள்ள ட்ரைபர் காரை தொடர்ந்து மேக்னைட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முகப்பு தோற்றம் கிரில் அமைப்பு போன்றவற்றில் முரட்டுதன்மையை வெளிப்படுத்துகின்றது. இன்டிரியர் அமைப்பில் மிகவும் நேர்த்தியான டிசைன் வழங்கப்பட்டு 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

Nissan magnite dashboard

அதிகாரப்பூர்வ முன்பதிவு நவம்பர் முதல் வாரத்தில் துவங்கப்பட்டு, தீபாவளிக்கு முன்பாக அல்லது பிறகு நிசான் மேக்னைட் எஸ்யூவி ரூ.5.30 லட்சம் முதல் ரூ.8 லட்சத்திற்குள் வெளியிடப்படலாம்.

Web Title : Nissan Magnite production begins, launch soon