ரேஞ்ச் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

0

இந்திய மோட்டார் வாகன சந்தையில், முதல் கன்வெர்டிபிள் ரக எஸ்யூவி மாடலாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின்,  ரேஞ்ச் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி ரூ.69.50 லட்சம் விலையில் பல்வேறு வசதிகளை பெற்ற மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி

ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் , இந்திய மோட்டார் சந்தையில் வெளியிட்டுள்ள டிராப் டாப் எஸ்யூவி மாடல் எவோக் HSE டைனமிக் என்ற ஒற்றை வேரியன்டில் முழுமையான பல்வேறு வசதிகளை கொண்டதாக 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்றதாக வெளியாகியுள்ளது.

Google News

ஜேஎல்ஆர் நிறுவனத்தின் 2.0 இஞ்சினியம் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 240 ஹெச்பி ஆற்றல் மற்றும் 340 என்எம் இழுவைத் திறன் வெளிப்படுத்தும், இதில் நான்கு சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி மாடல் அதிகபட்சமாக மணிக்கு 217 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக விளங்குவதுடன், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8 விநாடிகள் எடுத்துக் கொள்ளும்.

இந்த மாடலில் இடம்பெற்றுள்ள மேற்கூறை மிக சிறப்பான வகையில் சாலை சப்தம் உட்பட சிறப்பான கேபின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு ஃபேபரிக் கொண்ட இந்த கூறை மணிக்கு 48 கிமீ வேகம் வரை திறந்த நிலையிலும், முழுமையாக மேற்கூறை எலக்ட்ரிக் கொண்டு இயக்கப்படுவதனால் 21 விநாடிகளில் முழுமையாக மூடிக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்யூவி மாடலில் ஸெனான் எல்இடி ஆடாப்டிவ் ஹெட்லைட் வழங்கப்பட்டு ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, சுற்றுப்புறத்தில் பார்க்கும் வகையிலான கேமரா, வை-ஃபை ஹாட்ஸ்பாட், இன்டச் கன்ட்ரோல் ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை பெற்றுள்ளது.

ரேஞ்ச் ரோவர் எவோக் எஸ்யூவி விலை ரூ. 69.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)