ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவிவருகின்ற நவம்பர் 6ந் தேதி ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளில் புகழ்பெற்ற ரெனால்ட் கேப்டூர் க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி

இந்திய சந்தையில் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள கேப்டூர் க்ராஸ்ஓவர் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மேலும்  1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள், 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் ஆகியவற்றுடன் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக இருக்கும்.

முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட் ஆகியவற்றை பெற்றுள்ளது. வரும் நவம்பர் 6 , 2017 அன்று வெளியாக உள்ள ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி விலை ரூ.12 லட்சத்தில் தொடங்கி ரூ.17 லட்சத்திற்குள் அமையும் வாய்ப்புகள் உள்ளது.