2017 ஸ்கோடா ரேபிட் எடிசன் X என மான்ட் கார்லோ வெளியானது

skoda rapid editionகடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்கோடா ரேபிட் காரில் சிறப்பு எடிசனாக அறிமுகம் செய்யப்பட்ட ரேபிட் மான்ட் கார்லோ பேட்ஜ் தற்போது ரேபிட் எடிசன் X என பெயிரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் எடிசன் X

skoda rapid monte carlo edition car

சண்டிகரில் உள்ள மான்ட் கார்லோ கிளாத்திங் நிறுவனத்தை பிராண்டாக கொண்டு வெளியிடப்பட்டதாக காப்புரிமை மீறல் வழக்கின் காரணமாக இந்த பேட்ஜை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது பேட்ஜ் எடிசன் X என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி முந்தைய வசதிகளில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

கருப்பு நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கருப்பினை பெற்ற 16 அங்குல அலாய் வீல், மேற்கூறையில் கருப்பு பூச்சூ, முன்பக்க கிரில், டெயில்கேட் மற்றும் டிஃப்யூசஸர் போன்றவற்றில் கருப்பு நிறத்தை பெற்றுள்ளது.

கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்க உள்ள மான்ட் கார்லோ மாடலின் இன்டிரியரில் கருப்பு நிறத்தை பெற்ற டேஸ்போர்டு மற்றும் இருக்கைகளுடன் 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ், இபிடி போன்றவ்வற்றுடன் முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பை ஆகியவற்றுடன் ரியர் பார்க்கிங் சென்சாரை பெற்றுள்ளது.

Skoda Rapid Monte Carlo dashboard

1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 105hp பவரை வெளிப்படுத்தும் மாடலில் 5 வேக மேனுவல் அல்லது 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110hp பவரை வெளிப்படுத்தும் மாடலில் 5 வேக மேனுவல் அல்லது 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும்.

ஸ்கோடா ரேபிட் எடிசன் X விலை பட்டியல்

Skoda Rapid Edition X 1.6 petrol MT: ரூ. 10.75 லட்சம்
Skoda Rapid Edition X 1.6 petrol AT: ரூ. 11.97 லட்சம்
Skoda Rapid Edition X 1.5 diesel MT: ரூ. 12.46 லட்சம்
Skoda Rapid Edition X 1.5 diesel AT: ரூ. 13.57 லட்சம்

( இந்தியா எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல் )

skoda rapid monte carlo edition Skoda Rapid Monte Carlo rear seats skoda rapid monte carlo edition rear Skoda Rapid Monte Carlo rear fascia